1930-ஆம் ஆண்டு தான் எரிவாயு இருப்பதாக சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பலன் இன்று 25 லட்சம் இந்தியர்கள் அங்கு பணியில் உள்ளனர்.
தமிழர்களில் பெரும்பான்மையானவர்களை சவுதி அரேபியாவில், ரியாத் மாநகரில் பாத்தா மற்றும் மலாங் பகுதிகளில் காணலாம்.
இவை தவிர அபஹா, ஜெத்தா, ஜுபைல், அல்கசிம் பகுதிகளிலும் நிறைய தமிழர்கள் வேலை செய்கின்றனர்.
சவுதியில் பணி தொடர்பாக எந்த நாட்டுப் பெண்ணாக, இருந்தாலும், அவர் அங்குள்ள பெண்களைப் போன்று "அபாயா' எனும் கறுப்பு உடையை அணிய வேண்டும்.
இந்த பெண்கள் தனியாகக் கடை வீதிகளில் நடக்கக்கூடாது. கணவர், குழந்தை, பாதுகாவலர் இவர்களுடன் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் போது கறுப்பு அங்கியை அணிந்து கொண்டே வர வேண்டும். வீட்டிற்கு வெளியே எங்கு சென்றாலும் தலைமுடியை மறைத்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் தலை முதல் கால் வரை கறுப்புத்துணியால் மூடிக்கொள்ள வேண்டும். வெளிநாட்டுப் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியது இல்லை. தெருக்களிலோ, கடை வீதிகளிலோ அரங்குகளிலோ சத்தம் போட்டு பேசக்கூடாது. பலத்த சத்தமுடன் சிரிக்கவும் கூடாது. கணவரின் தோளையோ, கைகளையோ நெருக்கமாக பிடித்துக் கொண்டு செல்லக்கூடாது.
சவுதியில் பன்னாட்டு இந்தியப் பள்ளிகளில் ரியாத், ஜெத்தா, தம்மாம் போன்ற நகரங்களில் தமிழ் மொழி மூன்றாம் மொழியாக கற்பிக்கப்படுகிறது.