தினமணி கொண்டாட்டம்

கரிசனங்களின் குவியல்

18th Aug 2019 09:59 AM

ADVERTISEMENT

கிஷோர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "தேடு'. சஞ்சய், மேக்னா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுசி ஈஸ்வர் இயக்குகிறார். சிவகாசி முருகேசன் தயாரிக்கிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்த தேடு.
 எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது. செல்போன் மோகம் என்பது இன்றைய தலைமுறைகளை வேறு எல்லைகளுக்கு எடுத்து சென்று விட்டது. இது மாதிரியான சமீப பிரச்னைகளின் தொகுப்புதான் இந்தப் படம். ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது படம்'' என்றார் இயக்குநர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT