தினமணி கொண்டாட்டம்

ஓர்ச்சா

18th Aug 2019 10:19 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் பந்கல் கண்ட் பகுதியில் ஓர்ச்சா என்னும் நகர் அமைந்துள்ளது. இதனை "உச்சா' எனவும் அழைக்கின்றனர். ஜான்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
 ஓர்ச்சா அரண்மனைகளுக்கும் கோயில்களுக்கும் பிரபலம்.
 இந்த நகர் 1531-ஆம் ஆண்டு, ராஜபுத்ர மன்னர் ருத்ர பிரதாப் உருவாக்கியது. பெட்வா நதியின் கரையில் அமைந்துள்ளது.
 பெரிய அரண்மனை கோட்டை சூழ அமைந்துள்ளது. உள்ளே பல கட்டடங்கள் காலத்தால் அழியாமல் சிறப்பாக இன்றும் உள்ளன.
 இவற்றில் ராஜா மஹால், ராம்ராஜா கோயில், ஜகாங்கீர் மஹால் ஆகியவை காண வேண்டியவை.
 ராம்ராஜா கோயில், சதுர அடித்தளத்துடனும், ஏராளமான ஜன்னல்களுடனும் மேலே கோபுர தாழிகளுடனும் அமைந்திருக்கும். அரண்மனையில் ராமர் ஆலயம் அமைந்திருப்பது இங்கு மட்டுமே. இதே போல் லட்சுமிக்கு தனி கோயில் உள்ளது.
 இங்குள்ள சதுர் புஜ கோயிலும் பிரபலமானது. கோட்டைக்குள் மன்னரின் ஒட்டகங்கள் தங்குவதற்கு பெரிய இடம் உள்ளது. அதன் மீது ஏறி நின்றால் ஊரையே சுற்றிப் பார்க்கலாம்.
 ஓர்ச்சா என்றால் "மறைவான இடம்' எனப் பொருள்.
 ஆக்ராவில் தாஜ்மஹால் பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக வந்து இங்கும் பார்க்கலாம்.
 டெல்லியிலிந்து ஓர்ச்சாவுக்கு எளிதில் வரலாம்.
 சென்னை-டெல்லி எக்ஸ்பிரஸில் ஜான்சியிலும் இறங்கிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT