மராட்டிய மக்களின் புத்தாண்டு

சந்திர ஆண்டு கணக்குப்படி சித்திரை மாதம் முதல் நாள் (ஏப்ரல் 6) குடிபத்வா கொண்டாடப்படுகிறது.
மராட்டிய மக்களின் புத்தாண்டு

மராட்டிய மக்களின் புத்தாண்டு பிறப்பு தான் "குடிபத்வா'.
 சந்திர ஆண்டு கணக்குப்படி சித்திரை மாதம் முதல் நாள் (ஏப்ரல் 6) குடிபத்வா கொண்டாடப்படுகிறது.
 மராட்டிய போர் வீரர்கள் வெற்றிகளைக் குவித்து நாடு திரும்பிய நாள்!
 அவர்களை வரவேற்று வெற்றி கம்பமும் கொடியும் ஏற்றப்படுகிறது.
 "குடி' என்றால் கம்பம். "பத்வா' என்றால் ஏற்றி கொண்டாடுதல்!
 ஒரு கம்பை நட்டு அதன் தலையில் ஒரு பித்தளை சொம்பை தலைகீழாகக் கவிழ்த்து, புடவை சாத்தி, மாவிலை பூ அலங்காரம் செய்து, பூஜித்துத் தீபம் காட்டி வழிபடுவர்.
 மராட்டியர்களுக்குப் புத்தாண்டு மிகச்சிறப்பு!
 அன்று வீட்டை சுத்தம் செய்து, மெழுகு ரங்கோலி கோலம் போட்டு அதனைச் சுற்றி அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அழகூட்டுவர்.
 அத்துடன் புத்தாண்டு பிறப்பிற்காகவே வாங்கிய புத்தாடைகளை அணிந்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர்! அன்றைய உணவில் வேப்பம்பூ வெல்ல பச்சடி, போளி மற்றும் பருப்பு வடை நிச்சயம் உண்டு.
 நகரங்களில் மராட்டிய சங்கங்கள் மராட்டிய கொடியை ஏற்றி, வெற்றிக்கம்பத்தை அலங்கரித்து, ஊர்வலமாகப் பவனி வருவர். அப்போது பாரம்பரிய மராட்டிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்...!
 புத்தாண்டை முன்னிட்டு மராட்டியர்கள் கண்டிப்பாகக் கோயிலுக்கு விஜயம் செய்து வணங்குவர்!

 மகாராஷ்டிரம், கொங்கனி, கோவா பகுதிகளில் குடிபத்வா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மராட்டியர்கள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளனர். அங்கெல்லாமும் குடிபத்வாவை முன்னிட்டு ஒற்றுமை ஊர்வலம் உண்டு.
 இதேநாளில் தான் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் புது ஆண்டு பிறப்பு "யுகாதி' கொண்டாடப்படுகிறது.
 புத்தமதத்தினரும் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
 சிந்தி மக்கள் இந்நாளை "சேட்டிசந்த்' என அழைப்பர்.
 அவர்களுடைய கடவுள் ஜுலிலால் தினமாக இதனை அனுசரித்து அவர் கோயிலுக்குச் சென்று வழிபடுவர். வீட்டில் அன்று சர்க்கரை சாதம், பருப்பு வடை கட்டாயம் உண்டு.
 நாசிக், இந்தக் கொடிக்கம்ப பொம்மைகளுக்குப் பிரபலம்! அதனை வாங்கி அலங்கரித்து, பல மராட்டியர்கள் தங்கள் வீட்டு உச்சியில் மரத்தில் அல்லது ஜன்னல் வழியே வெளியே தெரியும்படி மாட்டியிருப்பர்!
 -ராஜிராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com