ஹாலிவுட் கதை இயக்கும் சாமி 

ஹாலிவுட் கதை இயக்கும் சாமி 

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் "அக்கா குருவி'.


மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் "அக்கா குருவி'.
ஹாலிவுட்டில் வெளிவந்து உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த "சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்' படத்தைத் தழுவி இப்படம் உருவாக்கப்படவுள்ளது. ஆஸ்கர் விருது மற்றும் உலகத் திரைப்பட விழாக்களில் பல அங்கீகாரங்களைப் பெற்ற இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி உரிமைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தப் படம்தான் "அக்கா குருவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
"மிருகம்', "சிந்து சமவெளி' படங்களை இயக்கிய  சாமி இப்படத்தின் இயக்குநர்  பொறுப்பை ஏற்றுள்ளார்.  இப்படத்தில் மிக முக்கியக் கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸர் - ஆன தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி "ஷூ' ஒன்று இடம் பெறுகிறது.  கொடைக்கானல் அதனருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊரான பூம்பாறை கிராமம் போன்ற இடங்களில் 55 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கியுள்ளார்கள்.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. மே மாத இறுதியில் படம் திரைக்கு வரவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com