பஞ்சராக்ஷரம்

குறும்பட உலகத்தில் இருந்து வெள்ளித்திரைக்குப் படையெடுக்கும் மற்றொரு படைப்பாளி பாலாஜி வைரமுத்து.
பஞ்சராக்ஷரம்

குறும்பட உலகத்தில் இருந்து வெள்ளித்திரைக்குப் படையெடுக்கும் மற்றொரு படைப்பாளி பாலாஜி வைரமுத்து. இவர் எழுதி இயக்கும் படத்துக்குப் "பஞ்சராக்ஷரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதென்ன பஞ்சராக்ஷரம் என கேட்ட போது... நமசிவாய... என்ற இந்த ஐந்து எழுத்தை குறிக்கும் சொல். நம் எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்குத் திட்டமிட்டு இருக்கிறமோ, அது அந்தளவுக்குக் கிடைத்தே தீரும் என்பதுதான் இதன் பொருள். ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் சிவனின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம். அந்த ரகசியத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். எண்ணம் எதுவோ, அதுவே வாழ்க்கை. மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்னக் கூடாரத்தில் இருந்து ஓர் உலகமே வெளியே வருகிறது என்பதும் பஞ்சராக்ஷரம். இது நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே, அதைப் பற்றி சிந்திப்போம். அந்த எண்ணம் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை அமைக்கிறது. இது 2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய காலத்தையும், இந்த நாளையும் இணைத்து பார்க்கும் முயற்சி என்றார் பாலாஜி வைரமுத்து. சனா, கோகுல், மதுஷாலினி, அஸ்வின் ஜெரோம், சந்தோஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com