தினமணி கதிர்

சிரி... சிரி...

25th Sep 2023 07:18 PM

ADVERTISEMENT

இட்லி, தோசை வேண்டாம். சப்பாத்தி இருந்தா மட்டும் போடுங்கன்னு சொல்றீயே. பிச்சை எடுக்கற உனக்கு எந்த அளவுக்குக் கொழுப்பு..''
''கொழுப்பு இல்லை தாயி.. சுகர்தான் 350 இருக்கு..''
-க.நாகராஜன், பறக்கை.

''காலையில் சாப்பிட்ட அயிட்டத்தை ஏண்டா மதியமும் சாப்பிடுறே..?''
''காலையில் ஆரம்பிச்சதுதான் இன்னும் முடியலை...''

''இவர் எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சிட்டார்...''
''ஆனால் ஒரு குறை...''
''என்ன?''
''சைடு டிஷ்ஷா பயறு கடலைன்னு எதையும் வைக்கலை..''

''ஏன்டி.. கேஸ் விலை குறைந்து போச்சே. ஒரு கப் ஓ.சி. காப்பி கிடைக்குமா?''
''காபி பொடி விலை குறைந்தால் யோசிக்கலாம்...'' 

ADVERTISEMENT

''இன்னிக்கு டிபன் இட்லி.. நாளை இதே மாவில் தோசையா...?''
''இல்லை. இதே மாவில் மைசூரு உப்புமா...''
-பர்வதவர்த்தினி, பம்மல்.


''தினசரி பேப்பர் வாங்குறதை ஏன் சார் விட்டுட்டீங்க..?''
''ஓ.சி. பேப்பர் படிக்க வர்றவங்களுக்கு டீ- காப்பி கொடுத்து கட்டுப்படி ஆகலைப்பா..?''

''ஒரே சமயத்துல சாப்பாடும், காசும் கேட்கிறீயே ? ஏம்பா..?''
''செரிமானத்துக்கு மாத்திரை வாங்கி சாப்பிடத்தான் தாயே..?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
''அந்தாளு சரக்கடிச்சிட்டு ஹோட்டலுக்கு வந்திருப்பான் தோணுது..?''
''எப்படி சொல்றே..''
''மில்லி ஊத்தப்பம் கொண்டு வான்னு கேட்டாரே..''
-கி.வாசுதேவன், தஞ்சை.

''உன் கணவர்கிட்ட உங்களுக்குப் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன?''
'' அவர் செய்ற சமையல் எனக்கு பிடிக்கும். அதுக்காக அவரின் தற்பெருமை பிடிக்காது...'' 

''உன் புருஷன் தேர்தலில் தோற்றாலும் நன்மை இருக்குன்னு சொல்றீயே.. எப்படி?''
'' வீட்டு வேலை தெரியாம இருந்தவரு. இப்போ மாவரைக்கிறது,  இட்லி- தோசை ஊத்தறுது, துணி துவைக்கிறதுன்னு நிறைய வேலை செய்யறாரே..''

''உன் புருஷன் நல்லா சமைப்பாராடீ...''
'' என்ன அப்படி கேட்டுட்டே. அவரோட சமையல் வாசனையில்தான் தினமும் முழிச்சுக்குவேன்...''

''என்னடி சமையலில் உப்பு, சப்பு இல்லை. அப்படியும் உன் புருஷன் குறை சொல்லாமல் சாப்பிட்டு போறாரே..''
''அவரு சமையலை அவரே எப்படி குறை சொல்வாரு...''

''ஏன்டி.. வேலைக்காரி முழுகாம இருக்கான்னு தெரிஞ்சதும் உன் புருஷன் மயக்கம் போட்டுட்டாரே...''
''டெலிவரிக்கு லீவு போட்டுட்டா,  சமையல் வேலை, துணி துவைக்கிறதெல்லாம் அவர்தானே செய்யணுமேன்ற பயம்டீ அவருக்கு..''
-வி.ரேவதி, தஞ்சை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT