தினமணி கதிர்

வாட்ஸ் அப்பில் புதிய சேவை!

25th Sep 2023 07:22 PM | அ.சர்ப்ராஸ்

ADVERTISEMENT

வாட்ஸ் அப்பில் புதிய சேவையாக 'சேனல்ஸ்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சில  நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியா உள்பட 150 நாடுகளில் அறிமுகமாகி உள்ளது. 

ட்விட்டரில் பிரபலங்களைப் பின்தொடர்வதைப்போல் வாட்ஸ் அப்பில் இந்த புதிய சேவை உதவும். பிரபலங்கள், முன்னணி நிறுவனங்களின் தகவல்களை அவர்களின் சேனல்ûஸ பின்தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். அந்தந்த நாடுகளில் மக்களிடம் பிரபலமாக உள்ள சேனல்கள் தேடுதல் பட்டியலில் முதலிடம் வகிக்கும்.

உங்கள் வாட்ஸ் அப் கணக்கை வைத்தே இந்த சேனல்ஸ் கணக்கை தொடங்கிவிடலாம். சேனலுக்கு பெயரிட்டு நீங்கள் பதிவிடும் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அதற்கு ஏற்ப பயனாளர்கள் உங்கள் சேனலை பின்தொடர்வார்கள். பின்தொடர்பவர்களின் கைப்பேசி எண், புரோபைல் போட்டோ என எதையும் சேனல் அட்மின்கள் பார்க்க முடியாது. சேன்ல்ஸில் பதிவாகும் தகவல்கள் 30 நாள்களுக்கு பிறகு அழிந்துவிடும். சேனல்களில் பதிவாகும் தகவல்கள் பிடித்திருந்தால் எமோஜிகள் மூலம் பதில் அளிக்கலாம். அவை பிறரால் காண முடியாது. சேனல்களில் பிதிவிடப்படும் புதிய தகவல்களை லிங்குகளாக பிற குழுக்கள், சாட்களில் பகிரலாம். தற்போதைக்கு இந்த சேவை வாட்ஸ் அப் பிஸ்னஸில் முதலில் அறிமுகமாகி உள்ளது.

சேனல்ஸ் சேவையைப் பெற முதலில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அட்டேட்- சேனல்ஸ் - கிரியேட் சேனல் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT