தினமணி கதிர்

திரைக்  கதிர்

24th Sep 2023 06:35 PM

ADVERTISEMENT


"மார்க் ஆண்டனி' பெரிய கவனம் பெற்றதில், ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். "நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்த போது, அஜித்துடன் மிக நெருக்கமாகப் பழகிய ஆதிக், அப்போதே அவருக்கு ஒன் லைன் சொல்லி ஓகே வாங்கிவைத்திருந்தாராம். "மார்க் ஆண்டனி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் நேரத்தில் அஜித்தைச் சந்தித்து அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தினாராம். அதனால் "ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதி' என்கிறார்கள்.

----------------------------------------------------------------

விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நயன்தாரா கூறியிருப்பதாவது, "என்னுடைய ஆசீர்வாதத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சிறப்பான நாளில் நான் உங்களைப் பற்றி எழுதியே ஆக வேண்டும். ஆனால், நான் எழுதத் தொடங்கினால் சில விஷயங்களை குறிப்பிட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளமாட்டேன் என நினைக்கிறேன். நீங்கள் என் மீது பொழியும் அளவுகடந்த அன்பிற்கும் நம் உறவின் மீது வைத்திருக்கும் மரியாதைக்கும் நான் நிறையவே நன்றிக் கடன்பட்டுள்ளேன். என்றும் அன்பில் திளைத்து இருங்கள்..' என்று நெகிழ்ந்துள்ளார் நயன்.

----------------------------------------------------------------

ADVERTISEMENT

தான் நடிக்கும் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வரும் அனுபமா பரமேஸ்வரன், சென்ற ஆண்டில் தெலுங்கில் செம பிஸியானதில், ஹைதராபாத்திலும் வீடு வாங்கிவிட்டார். தமிழில் வரும் வாய்ப்புகளை சல்லடை போட்டு அலசுகிறார். ஜெயம் ரவியுடன் "சைரன்' படத்தில் நடித்து முடித்தவர், அந்தப் படத்தின் ரிலீஸூக்குப் பிறகே அடுத்த படத்தை ஒப்புக் கொள்வார் என்கிறார்கள்.

----------------------------------------------------------------

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் இடைவெளியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். அதில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. வீரர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் பயோபிக்கில் யாரெல்லாம் நடிக்கலாம் என்று கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா, "ரோஹித் சர்மாவின் பயோபிக்கில் விஜய் சேதுபதியும் ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் தனுஷூம் ஜடேஜாவின் பயோபிக்கில் அல்லு அர்ஜுனும் நடித்தால் நன்றாக இருக்கும்' எனக் கூறியிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT