தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உப்பு சத்து அதிகரிக்க...?

எஸ். சுவாமிநாதன்

ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?

-மல்லிகா,
திருநாகேஸ்வரம்.

பெண்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டிய உப்புச் சத்துக்களில் ஒன்று சுண்ணாம்பு சத்து எனும் கால்ஷியம் சத்தாகும். பல், எலும்பு போன்றவை வலுவாக இருப்பதற்கும், சுத்தமான ரத்தத்தைப் பெறுவதற்கும், உடலுக்கு நல்ல பலத்தைத் தருவதிலும் பங்காற்றுகிறது.

பால், பால் ஏடு, முட்டை, காய்ந்த அவரைப் பருப்பு, தேனில் ஊறிய நெல்லிக்காய், உளுந்து, முட்டைக்கோஸ், கோங்கரா எனும் புளிச்ச கீரை, முருங்கைக் கீரை, காய்ந்த அத்திப்பழம், கொத்தவரங்காய், வெந்தயக்கீரை, காலி ப்ளவர், முள்ளங்கி, எலுமிச்சம் பழம், திராட்சை, ஆரஞ்சு, எள்ளு இவற்றில் கால்ஷியம் சத்து நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் úஸாடியம், நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து கிடைக்க உதவுகிறது. கண்பார்வை மங்குதல், காது கேளாமை போன்ற குறைபாடுகளைச் சீராக்கி, தருகிறது.

பால், முட்டை, ஆப்பிள், பீட்ரூட், பேரிக்காய், உலர் பழங்கள், தர்பூசணி ஆகியவற்றில் úஸாடியம் தாராளமாக அடங்கி இருக்கிறது.

மூளைக்கும் நரம்புகளுக்கும் தேவையான புஷ்டியைக் கொடுத்து, பல், எலும்பு, முடி இவையெல்லாம் வளரக் காரணமாக இருக்கும். ஃபாஸ்ஃபரஸ் வாதாம் பருப்பு, மீன், இறைச்சி, ஆப்பிள் பழம் போன்றவற்றில் அதிகமாய் உள்ளது. இந்தச் சத்து உடலில் குறையத் தொடங்கினால், ஓச்சலும் சோம்பலும் அதிகமுண்டாகும். மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் ஃபாஸ்ஃபரஸை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

உணவில் கந்தகத்தின் அளவு குறைந்து போனால், உடலில் சுத்தமற்ற பொருட்களின் அளவு அதிகரிக்கும். கல்லீரல் மந்தமாகச் செயல்படும் ஈஸ்ட், சாக்லெட், பால், உருளைக்கிழங்கு, வெங்காயம், கர்ஜுரக்காய் ஆகியவற்றில் கந்தகச் சத்து நிறைந்திருக்கிறது.

புண்ணை ஆற்றுவதும், உடலை சம எடையுள்ள பாதுகாக்கக் கூடியதுமான பொட்டாசியம் உப்பை தேவையான அளவு உடலில் சேரும்போது மலச்சிக்கலை நீக்கி உடம்பு வலியையும் போக்கும். இதன் சத்து குறைந்தால் மலச்சிக்கல், சொறிசிரங்கு தோன்றும். காயம் ஆறாது. ஆலிவ் எண்ணெய், ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், திராட்சை, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, அன்னாசிப் பழம், வெள்ளரிக்காயில் பொட்டாட்சியம் அதிக அளவில் இருக்கிறது.

தூக்கத்தின் சுகத்தை அனுபவிக்கவும், உற்சாகத்தைப் பெறவும், நரம்பு மண்டலங்களை ஊக்கப்படுத்தி அவற்றிக்குத் தேவையான சக்தியையும் கரும்மக்னீஷியம் உப்பு சத்தை கொக்கோ, லெட்யூஸ் , பேரீச்சம் பழம், அத்திப்பழம், ஆப்பிள் பழம், பீட்ரூட், தக்காளி ஆகியவற்றின் மூலம் நாம் பெறலாம். இதன் வரவு உடலுக்குக் குறைந்தால் மனதுக்கு அமைதி குறைந்து உடற்சூட்டை அதிகரிக்கும் பித்தம் வளர்ந்துவிடும்.

உடல் வெளியிடக் கூடிய விஷப் பொருட்கள் மூளைக்கு அபாயம் நேராமல் காத்து நின்று, உடல் சுரப்பிகள் அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் அயோடின் உப்பை நாம் தக்காளி, கார்ட, கிட்னி பீன்ஸ், வாழைப்பழம், முட்டைக் கோஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, கீரைகளிலிருந்து பெறுகிறோம். இதன் வரவு குறைந்துபோனால் சுரப்பிகளெல்லாம் வேலை செய்வதை நிறுத்திவிடும்.

'உடலின் சலவைக்காரன்' எனப்படும் குளோரின் கீல்கள், தடைகளுக்கு அசைவை ஏற்படுத்தி சக்தியைத் தருகிறது. கொழுப்பு உடலில் வளராமல் தடுக்கிறது. பயோரியா எனும் பல் உபாதை ஏற்படாமல் பாதுகாக்கிறது. தக்காளி, புளிச்சகீரை, பால், முட்டை, பேரீச்சம் பழம், வாழைப்பழம், கோதுமை, பேரிக்காய் மூலம் குளோரின் சத்தை நாம் பெறுகிறோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT