தினமணி கதிர்

சிரி... சிரி...

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

 

''நம்ம பையனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சிங்க?''
''எப்படி சொல்றே கமலா''
''சமையல் புத்தகங்களை வாங்கி படிக்கிறானே?''

 

''ஏன்டி. சீரியல் பாரு வேண்டாமுன்னு சொல்லலே? அதுக்காக இப்படியா?''
''நான் என்னங்க பண்ணிட்டேன்!''
''நீ சிரித்தால் நான் சிரிக்கணும். நீ அழுதா நான் அழணுமா?''

ADVERTISEMENT

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.


''ஓ.சி.யில் பேப்பர் படிக்கிறதை விட்டுட்டேன் டீ''
''என்னாச்சுங்க?''
''கடன் கேட்டு தொல்லையாச்சு. அதான்!''

அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.


''சம்மர் எப்படி வசந்த காலமுன்னு சொல்றீங்க?''
''நீ உன் அம்மா வீட்டுக்கு சம்மர் லீவுக்கு தானே போற !''

பி.கவிதா,
சிதம்பரம்.

 

''வீட்டில் உங்க மனைவியின் திட்டுகளை எப்படி சமாளிப்பீங்க?''
''ஒரு பெரிய பெட்டி நிறைய 'மன்னிப்பு' கடிதம் போட்டு வைச்சிருக்கேன்!''

கு.அருணாசலம்,
தென்காசி.


''காது எப்படி கிழிஞ்சுது''
''வாய் கிழிய பேசுன உன் பேச்சைக் கேட்டேன்ல!''


''கமலா. என் கனவுல பாம்பு வருது. கவலையா இருக்கு?''
''கவலைப்படாதீங்க! என் கனவில் கீரி வருது. விரட்டிவிடலாம்!''

-பர்வதவர்த்தினி,
பம்மல்.

 

''வேலைக்காரி முனியம்மாவோட பேரை மாத்திக்கச் சொல்லிடேங்க!''
''என்னச்சுடீ''
'' நம்ம குழந்தை 'மினி அம்மா'-என்னு கூப்பிடுது''

 

''உன் புருஷன் குடிச்சிட்டு வர்றாரே. அது நல்லாவா இருக்கு?''
''குடிக்கிறவங்களைக் கேட்டாதானே தெரியும்.''

-வி.ரேவதி,
தஞ்சை.

''நீ கோபப்படாமல் இருந்தா எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?''
''எதையாவது பேசி என் கோபத்தைக் கிளறாதேய்யா..!''''தூது சொல்ல ஒரு தோழி இல்லையேன்று துயர் கொண்டாள் தலைவி''
''அப்புறம் என்ன ஆச்சுங்க?''
''வேறு வழியின்றி 'வாட்ஸ் ஆஃப்' மெசேஜ் அனுப்பிவைத்தாள்''

-ஆர்.விஸ்வநாதன்,
சென்னை-78.

 

''என்னங்க. அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் என்ன வித்தியாசம்!''
''அந்தக் காலத்துல ஒருத்தர் சம்பாதிச்சு, நாலஞ்சி பசங்களைப் படிக்க வைச்சாங்க! இப்ப ஒரு குழந்தையை படிக்க வைக்கவே 4 பேரு சம்பாதிக்க வேண்டியிருக்கு?''

-சம்பத்குமாரி,
பொன்மலை.

ADVERTISEMENT
ADVERTISEMENT