தினமணி கதிர்

திரைக்  கதிர்

21st May 2023 04:54 PM

ADVERTISEMENT

 

நயன்தாராவின் "ரெüடி பிக்சர்ஸ்' நிறுவனம் குஜராத்தி மொழியில் தயாரித்து வெளியிட்ட "சுப் யாத்ரா' படம் பெரிய வசூலைக் குவித்திருக்கிறதாம். விஜய் சேதுபதி நடித்த "ஆண்டவன் கட்டளை' படத்தின் ரீமேக்கான இந்த குஜராத்தி படத்துக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்க, அடுத்தடுத்து குஜராத்தி மொழிப் படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் நயன்தாரா. "முதலீட்டுக்கு மும்பை நிறுவனங்கள் கை கொடுக்க, நல்ல கதைத் தேர்வு அடிப்படையில் அட்டகாசமான தயாரிப்பாளராக குஜராத்தில் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார் நயன்தாரா' என்கிறார்கள் சினிமா புள்ளிகள்.

----------------------------------

ஜெய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் "தீராக் காதல்.' ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தப் படம், முதல் காதலை நினைவூட்டும் கதையை மையப்படுத்தியதாம். "அதே கண்கள்', "பெட்ரோமாக்ஸ்' படங்களை இயக்கிய ரோஹித் வெங்கடேசன் இயக்கும் இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் நம்புகிறாராம் ஜெய். இந்தப் படத்தின் ரிலீஸýக்குப் பிறகுதான் அடுத்த படத்துக்கான கதையையும் நிறுவனத்தையும் முடிவெடுக்கிற ஐடியாவில் இருக்கிறாராம் ஜெய். அந்த அளவுக்கு "தீராக்காதல்' இன்றைய தலைமுறையுடன் இணையும் என்கிறாராம்.

ADVERTISEMENT

----------------------------------

சூர்யாவை வைத்து பாண்டிராஜ் இயக்கிய "எதற்கும் துணிந்தவன்' என்கிற ஒரே ஒரு படம்தான் ஓடவில்லை. பாண்டிராஜை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டார்கள் முன்னணி ஹீரோக்கள். பாண்டிராஜால் அடையாளம் காட்டப்பட்ட சிவகார்த்திகேயன் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை. கார்த்தி, விஷால் என அணுகிய ஆட்களும் பாண்டிராஜுக்குப் பிடிகொடுக்கவில்லை. இந்த நிலையில், ஜெயம் ரவி வலிய முன்வந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் பாண்டிராஜுக்கு நெருக்கமானவர்கள்.  பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறாராம். தன் மாமியாரின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறாராம் ஜெயம் ரவி.

----------------------------------

அஜித்  மகிழ் திருமேனி இணையும் படத்துக்கு "விடாமுயற்சி' எனத் தலைப்பு வைத்திருப்பது கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. "மாஸ் தலைப்புகளைத் தவிர்த்து தன்னம்பிக்கையான தலைப்புகளை வைத்து ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்' எனச் சிலர் சிலிர்க்க, "லாரி பின்னால் எழுத வேண்டிய வாசகங்களையெல்லாம் தலைப்பாக வைக்கிறாரே என புலம்புகின்றனர் அஜித் ரசிகர்கள். "மீகாமன்', "தடையறத் தாக்க' என்றெல்லாம் தலைப்புகள் வைத்த இயக்குநரை இப்படி மொக்கையாக்கிவிட்டாரே' என ஆவேசங்களும் அலையடிக்கின்றன. அனிருத் இசை என்பதே அஜித் பட அறிவிப்பின் ஆறுதலான விஷயம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT