தினமணி கதிர்

சிரி... சிரி...

4th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 


''நீ என்ன மாசாமாசம் உன் கணவர் சம்பளம் வாங்கின உடனே நகை வாங்கி கொடுக்க சொல்றே?''
'' நீ வேற அவரு அடமானம் வைத்த என் நகையை வாங்கி கொடுக்கச் சொல்றேன்!''




''என் மாமியார் ஓடுற ரயிலிலிருந்து கீழே விழுந்துட்டாங்க?''
''செயினை பிடித்து இழுத்தியா?''
''இல்லை.  மாமியார் வளையல் மட்டும்தான் போட்டுன்னு இருந்தாங்க?''

ADVERTISEMENT

தீபிகா சாரதி,
சென்னை.


''கடன் தள்ளுபடியை தெரிஞ்சுக்கவா பேங்கில் இவ்ளோ கூட்டம்!''
''இல்லை. அடுத்தாப்புல எப்ப கடன் தருவாங்கன்னு?''

வி.ரேவதி,
தஞ்சாவூர்.

 

''ஏன்டி. உங்கப்பா ரொம்ப சிக்கனப் பேர்வழியாமே! அப்படியா?''
''ம்..''

பாளை பசும்பொன்,
மதுரை.

 

''ஏன்டி, உன் பாய் ப்ரண்ட் படத்துல 'செகன்ட்  ஹீரோ'ன்னு சொன்னியே. எங்கடி ஆளையே காணோம்!''
''சில 'செகன்ட்ஸ்'ல் வந்துட்டு போவாரு. அதான் அப்படி சொன்னேன்!''

க.நாகமுத்து,
திண்டுக்கல்.

 

''அவன் மகா குடிகாரன்னு எதை வச்சுடி சொல்றே?''
''அவன்    ஸ்கூட்டர்கூட  டாஸ்மாக் பக்கம் போனா தானா நிற்குதே!''

சம்பத்குமாரி,
பொன்மலை.

 

''ஏன் மாலா. நேத்துக்கு வேலைக்கு வரலை. என்கிட்ட கூட சொல்லவே இல்லை?''
''இல்லையேம்மா. பேஸ்புக்குல தலைவலி வேலைக்கு வரமுடியலைன்னு பதிவு கூட போட்டேன். ஐயா கூட மிஸ் யூ. கெட் வெல் என்னு கமென்ட் போட்டாரே?''

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம். 

 

''பூவா தலையான்னு போடலாம்னா கூட முடியலை!''
''ஏன்டி..''
''பூ கிடைக்குது. தலைதான் கிடைக்கலை!''

-பர்வதவர்த்தினி,
பம்மல்.

''காக்கா ஏன் கருப்பா கருப்பா இருக்குதுடி!''
''வெயிலில் சுற்றுவதை நிறுத்த மாட்டேங்குதே அதான்!''

விமலா சடையப்பன்,
காளனம்பட்டி.

 

''குதிரைப்படை வீரரைக் கட்டிகிட்டது தப்பாப் போச்சா.. என்னடி சொல்றே!''
''தினமும் சாப்பாட்டுக்கு கொள்ளுச் சுண்டல் வேணுங்கறாருடி..!''



''உங்க பையன் பேசவே மாட்டானே! அவனுக்கு வந்திருக்கிற மனைவி எப்படி?''
''வாதாடுற வக்கீல்!''

என்.கே.மூர்த்தி,
சென்னை.

 

''ஏன்டி. மொய் பணம் வசூல் பண்ற இடத்துல இவ்ளோ கூட்டம் இருக்கே?''
''ஆமாடி. மொய் பணத்துல தர்றேன்னு சொல்லி நிறைய பேருகிட்ட கடன் வாங்கிட்டாங்களாம். அதை வசூல் பண்ண வந்த கூட்டம்தான்!''

கி.வாசுதேவன்,
தஞ்சாவூர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT