சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மாவீரன் பகத் சிங்குக்கு தூக்குத் தண்டனையை ஆங்கிலேய அரசு விதித்தது. தன்னை தூக்கில் போட வேண்டாம் என்று பகத் சிங் கேட்டு கொண்டார்.
''வேறு என்ன? மன்னிப்பு கேட்டு விடுதலையைக் கோரப் போகிறாயா?'' என்று ஆங்கிலேய அரசு அதிகாரிகள் கேட்டனர்.
இதற்கு பகத் சிங்கோ, ''மன்னிப்பா? யாரிடம் யார் மன்னிப்பு கேட்பது? நான் என் தாய்நாட்டுக்காக, சாகத் தயாராக இருக்கிறேன். என்னைத் தூக்கில் போட்டால் என் உயிர் பிரியும்போது, என் உடல் என் தாய் மண்ணில் படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். அதனால் என்னை பீரங்கியால் சுட்டுத்தள்ளுங்கள். நான் என் தாய் மண்ணிலேயே விழுந்து உயிர் விடுவேன். அதைத்தான் நான் விரும்புகிறேன்'' என்று கம்பீரத்துடன் கூறினார்.