தினமணி கதிர்

சிரி... சிரி...

DIN


"இப்பல்லாம் ஆபிஸில் பழைய மாதிரி தூங்க முடியலை''
"என்னாச்சுங்க?''
"மேனேஜர் அவர் வேலையெல்லாம் என்கிட்ட தள்ளிட்டு, தூங்கப் போயிடுறார்!''

- ப.சோமசுந்தரம்,
சென்னை-129.

"தும்பைப் பூ மாதிரி இட்லி இருக்குமுன்னு சொன்னே. பழுப்பா இருக்கு?''
"காலையில்  வெள்ளையாக இருக்கிற பூ, சாயந்திரம் பழுத்து போகுதுல்ல..''

-கி.வாசுதேவன்,
தஞ்சாவூர்.

"என்ன மாமி. ஊறுகாய் பாட்டிலில் ஊறுகாய் இல்லையே?''
"மருமகளே பாட்டிலை பார்த்துகிட்டே சாப்பிடுவோம்''
"மாமி. நாங்களெல்லாம் ஊறுகாயை நினைத்துகொண்டே சாப்பிடுவோம்''

-எஸ்.முத்தம்மாள், 
திருவிடைமருதூர்.

"என்னடா.. இன்டர்வியூக்கு போனியே என்னாச்சு.''
"வேலைக்கு சேர்ந்தால் முதல் மாசம் ரூ.5 ஆயிரம்.  
அப்புறம் ஆறாவது மாசம் ரூ.10 ஆயிரம் தர்றதா சொன்னாங்க.  ஆறு மாசம் கழித்தே வேலைக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்''

-கே.இந்து குமரப்பன், 
விழுப்புரம்.

"அவர்  எனக்கு தூரத்துச் சொந்தம்.''
"உத்தேசமாக எவ்வளவு கிலோ மீட்டர் இருக்கும்.''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

"வக்கீலை கல்யாணம்  பண்ணிக்கிட்டது தப்பா போச்சுடீ''
" என்ன ஆச்சு..''
"சாப்பாடு சரியில்லை. துணி சரியா துவைக்கலைஎன்னா ஒவ்வொரு பிரிவா சொல்லி வழக்கு போடுவேன்னு சொல்றாருடீ''

-வண்ணை கணேசன்,
சென்னை.


 

"உங்க வீட்டு அழுக்குத் துணிகளை எடுத்துட்டுப் போறாரே.. அவர் சலவைத் தொழிலாளியா?''
"இல்லை. அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட போற கவுன்சிலர் வேட்பாளர்.''

-கு.அருணாசலம்,
தென்காசி.


 

"உங்க வீட்டு பெட்ரூமில் திருடன் வர்ற வரைக்கும் என்ன பண்ணேடீ''
"திருடன் அசப்புல என் வீட்டுக்காரு மாதிரி இருந்தாரு..''


 

"அந்த ஆளு எனக்கு கால் தூசுக்கு சமம்.''
" அப்புறம் ஏன் அவரை பார்த்து பயப்படறீங்க..''
"எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கே?''



 

"மருமகளே.. மூச்சு விட எனக்கு கஷ்டமா இருக்கு!''
"கஷ்டப்பட்டு உங்களை யார் விடச் சொன்னா?''
 



"உனக்குதான் கை, கால் நல்லா இருக்கே! ஏன் பிச்சை எடுக்கறே?''
"எனக்கு மனைவி சரியில்லை சாமி.''



"எங்க வீட்டு நாய் ரொம்ப புத்திசாலி.''
"'எப்படி சொல்றீங்க மச்சான்!''
"என் சம்பளத்தன்னிக்கு மட்டும் என்னை பார்த்து வாலாட்டும்!''

-தீபிகா சாரதி, 
சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT