தினமணி கதிர்

ஜெயிலர் முதல் தங்கலான் வரை... என்ன ஸ்பெஷல்?

டெல்டா அசோக்

ஏப்ரலில் ஜெயிலர் இசை வெளியீடு

சன் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் "எந்திரன்', "பேட்ட', "அண்ணாத்த' படங்களில் ரஜினி நடித்திருக்கிறார். இயக்குநர் நெல்சனும் விஜய்யை வைத்து "பீஸ்ட்' கொடுத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்ட "ஜெயிலர்' படப்பிடிப்பு இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது. படத்தின் இசை வெளியீடு எப்போது?, படத்தின் டீசர், டிரைலர் எப்போது வெளியாகும்?,  "ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சென்னை, கடலூர் பகுதிகளிலும் பின்னர், ஆதித்யா ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்தும் படப்பிடிப்பு நடைபெற்றது.

படத்தில் வில்லனாக வசந்த் ரவி அவரின் மனைவியாக ரவீணா ரவியும் நடித்து வருகின்றனர். ஒரு நாள் இரவில் நடக்கும் கதை இது. முத்துவேல் பாண்டியனாக அசத்தவிருக்கிறார் ரஜினி. பக்கா ஆக்ஷன் காமெடி ஜானர் பாணி கதை இது.  75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது என்றும், அதில் ரஜினியின் பகுதிகள் 75 சதவீதம் எடுத்து முடிக்கப்பட்டது என்றும் சென்ற டிசம்பரில் ஷெட்டியூல் பிரேக் விடப்பட்டது.

இப்போது பொங்கலுக்குப் பிறகு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  இன்னும் இரண்டு சண்டைக்காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள். வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். அந்த விழாவிலேயே படத்தின் டீசரையும் வெளியிடுகின்றனர்.
 
80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தது

சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்த "இந்தியன் 2'  படப்பிடிப்புக்கான செட் வேலைகளின் போது கிரேன் விபத்து ஏற்பட்டது. உயிரிழப்பு ஏற்பட்டதினால் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டன. அந்த பட வேலைகளை அப்படியே விட்டுவிட்டு கமலும், ஷங்கரும் தங்களின் அடுத்த படங்களில் பிசியாகினர். தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. கமல் நடித்து வெளியான விக்ரம் பெரும் வெற்றியை பெற்றது.

இருவரும் "இந்தியன் 2' -வில் பிஸி.  சென்னை பிரசாத் லேப்பில் படத்தின் முழு அரங்குகளும் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகின்றன. காஜலுக்கு மகப்பேறு காலம் என்பதால்  அவருக்குப் பதிலாக த்ரிஷா நடிக்க விருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.  பேச்சு வார்த்தைகள்தான் போய்க்கொண்டிருக்கிறது என்கிறது. ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்சிங்கின் போர்ஷன்கள் இன்னும் படமாக்காமல் உள்ளதாம்.

இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருப்பதால், இன்னும் படமாக்க வேண்டியது கொஞ்சம் தான் என்றும், எனவே ஒரே மூச்சாக ஷூட்டிங் கிளம்பி, படத்தை முடித்துவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். படத்தில் நடித்த விவேக், நெடுமுடிவேணு இருவரும் இப்போது இல்லை என்பதால், அவர்களது போர்ஷன்களுகாக ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் படக்குழுவினர். 

முழு வேகத்தில் விஜய் 67

கடந்த ஆண்டு  நவம்பரில் பூஜை போடப்பட்ட விஜய், லோகேஷ் கனகராஜின் "விஜய் 67'க்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது குறித்து இயக்குநரும் நடிகருமான மனோபாலா, "தளபதி 67" படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

லோகேஷ் மற்றும் எங்கள் தளபதி இருவரும் ஒரே எனர்ஜியில் ஃபுல் ஸ்விங்கில் உள்ளனர். முதல்நாளே, தூள்!" எனத் தெரிவித்திருக்கிறார். "மாஸ்டர்' படத்துக்குப் பின் விஜய் - லோகேஷ் இணையும் படமிது. கடந்த டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

"வாரிசு' படத்துக்குப் பின்னர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு விஜய், வெளிநாடு சென்த்றதால், ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தார்கள்.அதன்படி இன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. வழக்கமாக ஈ.வி.பி அல்லது கோகுலம் ஸ்டூடியோஸில்தான் விஜய்யின் படப்பிடிப்பு தொடங்கும்.

ஆனால், இந்த முறை சென்னைக்குள்ளேயே படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. "விஜய் 67' படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா ஆகியோர் தொடர்பான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். முன்னதாக, சென்ற வாரத்தில் இப்படம் குறித்த டெஸ்ட் ஷூட் ஒன்றையும் நடத்தியிருந்தார் லோகேஷ்.

இப்போது, சத்தமே இல்லாமல் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். 

அஜித் படத்தை தயாரிப்பதில் போட்டி 

அஜித்தை பொருத்தவரை ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துவிடுவார். அதுவும் அவருக்கு தோதுவான இயக்குநர்கள் என்றால் அடுத்தடுத்து அவர்களிடமே தன்னை ஒப்படைத்தே விடுவார். அப்படித்தான் "சிறுத்தை' சிவாவுடன் நான்கு படங்களில் பணியாற்றினார். அதனையடுத்து ஹெச்.வினோத்துடன் தற்போது மூன்றாவது முறையாக இணைந்த துணிவு வெளியாகியுள்ளது. சரி விஷயத்துக்கு வருவோம்.

"அஜித் 61' படப்பிடிப்பில் அஜித் பங்கேற்றாரா, இல்லை இனிமேல்தான் கலந்து கொள்வாரா என்பது இன்னும் உறுதிசெய்படாமல் இருக்கும் சூழலில் திடீரென "அஜித் 62' பற்றிய பேச்சு தற்போதே கிளம்பியுள்ளது. இப்படத்தை லைகா தயாரிக்கப் போவதாகவும், விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், நயன்தாரா ஹீரோயின், அனிருத் இசை எனவும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

"அஜித் 62'ஐ தயாரிக்க ஒரே சமயத்தில் மூன்று கம்பெனிகள் போட்டிப் போடுகின்றன. சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் என மெகா தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்திடம் பேசி வருகின்றன. அஜித்தின் அடுத்த படத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, அனிருத் கூட்டணி லைகாவுடன் கைகோர்க்க உள்ளதாகச் சொல்கிறார்கள். விக்னேஷ் சிவன் ஏற்கெனவே அஜித்தின் "என்னை அறிந்தால்' படத்தில் "அதாரு அதாரு' என்ற ஹிட் பாடலை எழுதியிருக்கிறார். சமீபத்திய "வலிமை'யிலும் இரண்டு பாடல்கள் எழுதியிருப்பதால் அஜித்தின் குட்புக்கில் அவர் ஏற்கெனவே இருக்கிறார். அதுபோலவே அனிருத்தும், நயனும் இதற்கு முன்னரே அஜித்துடன் பயணித்திருக்கிறார்கள்.

இறுதிக்கட்டத்தில் சூர்யா 42

ரஜினியின் "அண்ணாத்த' வுக்கு பிறகு இயக்குநர் சிவா, சூர்யாவை இயக்குகிறார் எனப் பேச்சு வந்தது. ஆனால், சூர்யாவோ பாலாவின் படத்தைத் துவங்கியதுடன், அதன் படப்பிடிப்புக்கும் கிளம்பினார். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு வந்தனர். இதற்கிடையே வெற்றிமாறனின் "வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட்டிலும் சூர்யா பங்கேற்க, பாலாவின் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சும் எழுந்தது. இதனால் சிவா- சூர்யாவின் படம் எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இப்படியொரு சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சூர்யா - சிவாவின் படம் நாளை தொடங்கி இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது.

சூர்யாவின் "சூரரைப் போற்று' பூஜை நிகழ்ந்த வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவுக்குச் சொந்தமான இடத்தில்தான் ‘சூர்யா 42' படத்தின் பூஜையும் நடந்தது. ஜோதிகாவின் படப் பூஜைகளும் இங்கேதான் நிகழும். இந்தப் படத்தைத் தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் மற்றும் தமிழின் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடிக்கிறார். முதன்முறையாகத் தமிழுக்கு வருகிறார் அவர். படத்திற்குத் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் "சிங்கம்', "சிங்கம் 2' ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் கைகோர்க்கிறார் டி.எஸ்.பி. ஒளிப்பதிவை சிவாவின் ஆஸ்தான அணியில் உள்ள வெற்றி கவனிக்கிறார். ஏப்ரலில் படம் திரைக்கு வரலாம் என்கிறார்கள். 

சிவகங்கையில் தங்கலான்

"சார்பட்டா பரம்பரை', "நட்சத்திரம் நகர்கிறது' படங்களுக்குப் பிறகு பா.ரஞ்சித், விக்ரமை வைத்து இயக்கும் படம், 18-ஆம் நூற்றாண்டு பின்னணியில் நடக்கும் கதையாகும்.  தங்கலான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரஞ்சித்தின் "மெட்ராஸ்' படத்தை தயாரித்தவர் ஞானவேல்ராஜா. அதனைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் ஒரு படத்தை இயக்க வேண்டும் விரும்பியதில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

இந்த படம் 18-19 நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால், தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல இடங்களிலும் லொகேஷன் தேடுதல் வேட்டையை நடத்தினார் பா.ரஞ்சித்.  இந்நிலையில்ஆந்திராவில் உள்ள கடப்பா பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி, நடந்து வருந்தது. விக்ரமுடன், பசுபதி  நடித்த காட்சிகள் படமாகி வந்தன. கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். "நட்சத்திரம் நகர்கிறது' கிஷோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.கடப்பா ஷெட்யூலை தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் சிவகங்கை ஏரியாவில் நடக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை: 4,146 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதுக்கப்பட்ட 2,000 புடவைகள் பறிமுதல்

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

SCROLL FOR NEXT