தினமணி கதிர்

அழகின் அழகு..!

22nd Jan 2023 06:00 AM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

உலகில் உள்ள நாடுகளில்சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும் சில நகரங்கள்

சென்ட்ரல் பார்க், நியூயார்க்

நியூயார்க்கில் பிரபலமான சென்ட்ரல் பார்கின் இருபுறமும் வானளாவிய கட்டடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்புறங்களின் கலவையுடன், ஒவ்வொரு பயணிகளையும் ஈர்க்கும் நகரமாக நியூயார்க் உள்ளது.

ADVERTISEMENT

ட்ரெவி நீரூற்று, இத்தாலி

இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ள இந்த ட்ரெவி நீரூற்றுக்கான கால்வாய் 19-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இந்த நீருற்றுக்கு பின்னர் மிகப்பெரிய பாரம்பரிய கட்டடம் அமைந்துள்ளது.

ரோம் பேரரசின் முதல் மன்னரான அகஸ்டசின் வலது கரமாக இருந்தவர் அக்ரிப்பா. அவர் தான் இந்த நீரூற்றுக்கான கால்வாய் அமைத்தவர். அவரது பெயர் நீரூற்றுக்கு பின்னுள்ள பிரம்மாண்ட கட்டட முகப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. ரோமில் இன்றும் செயல்படும் ஒரே பழமையான கால்வாய் அக்ரிப்பா அமைத்தது தான்.

இயற்கைக் காட்சிகள், சிலைகள் என அத்தனை தத்ரூபமாக அப்போதே அமைத்துள்ளனர். நீரூற்றுக்கு நடுவே உள்ளவர் ஓசியானஸ். கிரேக்க புராணம் அவரைத் தான் பூமியில் உள்ள ஆறுகள் அனைத்துக்கும் அதிபதி என நம்புகிறது. ஓசியானசுக்கு இடது புறம் இருக்கும் சிற்பம் வளத்தை குறிப்பதாகும். வலது புறம் இருப்பது நலத்தை குறிப்பதாகும்.

 

பார்சிலோனா, ஸ்பெயின்

ஸ்பெயினின் கேடலோனியா பிராந்தியத்தின் காஸ்மோபாலிட்டன் தலைநகரான பார்சிலோனா அதன் கலை மற்றும் கட்டடக்கலைக்கு பெயர் பெற்றது. அன்டோனி கவுடி வடிவமைத்த அற்புதமான சாக்ரடா பேமிலியா தேவாலயம் மற்றும் பிற நவீனத்துவ அடையாளங்கள் நகரம் முழுவதும்
உள்ளன.

நாட்டர் டேம் கதீட்ரல், பாரிஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பல முக்கிய இடங்கள் உள்ளன. அதில் ஒன்று நாட்டர் டேம் கதீட்ரல். இது 850 ஆண்டுகளாக இருந்தது. கதீட்ரல் என்றால் பெரிய கிறிஸ்தவ தேவாலயம் எனப் பொருள். இந்த பழமையான கட்டடம் 2019-இல் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்தது. ஐரோப்பிய கட்டடக்கலையின் ஒரு வகையான கோதிக் கட்டடக்கலையின் தலைசிறந்த உருவாக்கமாக இது அறியப்பட்டது.

தற்போது புனரமைப்பில் உள்ள இக்கட்டடம், 2024-இல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT