தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்த உபாதை அகல...

DIN

எனக்கு பித்தத்தினால் வாய்க்கசப்பு, வயிறெரிவு, கிறுகிறுப்பு, மயக்கம் போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன்.  பித்த உபாதைகளுக்கு மருந்து கூறவும்.

- கண்ணன்,
கும்பகோணம்.

பத்து கிராம் நல்ல சீரகம் எடுத்து தூசி தும்பு இல்லாமல் சுத்தம் செய்து ஒரு வாணையில் போட்டு, அது முழுகும்படி எலுமிச்சம்பழச்சாறு விட்டு ஊறவைத்து எடுத்து நிழலில் எடுத்து உலர்த்தி பத்திரப்படுத்தவும். இதனை விடியற்காலையில் சூரியன் உதிக்கும் முன் சிறிது சாப்பிட்டுவிட்டு, மறுபடியும் தூங்கிவிடவும். கை கண்ட மருந்து பித்த தோஷங்களெல்லாம் தீரும்.

மேலே குறிப்பிட்டதுபோல, நல்ல சீரகம் எடுத்து கையாந்தகரைச் சாறுவிட்டு ஊறவைக்கவும். சாறு காயக்காய மறுபடியும் விட்டுக் கொண்டு வரவும். இவ்வாறு மூன்று முறை விட்டு நன்றாகக் காய்ந்த பிறகு எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு முன்சொன்னவாறு விடியற்காலையில் தின்றுவர பித்தம் அடங்கிவிடும்.

தனிப்பட்ட நல்ல சீரகத்தை விடியற்காலையில் தின்று வந்தாலும் பித்தம் மட்டுப்பட்டுவிடும். உணவில் உப்பு, புளி, தவிர்க்கவும்.

இளநீர், பசும்பால், சீரகம், நெல், பொரி- இவைகளை ஒன்றாகக் கூட்டி கஞ்சி காய்ச்சி சாப்பிட்டால் பித்தம் தலைக்கேறியதால் உண்டாகும் கிறுகிறுப்பு, மயக்கம், பிரமை முதலியவை நீங்கும்.

மிளகு, பங்கு, நேர்வாளம் 3 பங்கு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). நேர்வாளத்தை முதலில் எலுமிச்சைப் பழச்சாறில் வேகவைத்து, பிறகு மிளகுடன் கூட்டி இரண்டையும் எலுமிச்சைப் பழச்சாற்றில் நன்றாக அரைத்து சிறு குளிகைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தவும்.

வேண்டும்பொழுது இதனை எலுமிச்சம்பழச்சாற்றிலிழைத்துக் கொடுக்க, பேதியாகி பித்தத்தைக் கழிக்கும். பித்தம், சுரம், வீக்கம், வாயு, துர்நீர், அரிப்பு முதலியவை தீரும். நன்றாகப் பேதியாகி குடலை சுத்தப்படுத்தும். மூட்டு வேதனைகள் தீரும். வெந்நீர் சாப்பிட்டால் நன்றாகப் பேதியாகும். அதிகமானால் பசும்பால் கஞ்சி சாப்பிடவும்.

கரும்பைத் தண்ணீரில் ஊறப்போட்டு விடியற்காலையில் தின்னவும். இவ்வாறு மூன்று நாள்கள் சாப்பிட பித்தம் தீரும்.

பித்தத்தினால் சிலருக்கு வாயில் கசப்பு நீர் ஊறும். அதற்கு கொத்தமல்லி, மாம்பட்டை, மாந்தளிர், இலாமச்சம்வேர் இவை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒருலிட்டர் தண்ணீர் ஊற்றி, கால்லிட்டராக வற்றியதும் வடிகட்டி, காலை மாலை சமபங்காகப் பிரித்து, சிறிது தேன்விட்டுக் கலந்து சாப்பிட, வயிற்றுப் போக்கு, மூர்ச்சை, திமிர், வாய் நீருறள் இவைகளைல்லாம் தீரும். ஏழு நாள்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.

பித்த வாந்தி, விக்கல், எரிச்சல், காய்ச்சல் குணமாக, நெற்பொரி, ஏலக்காய், திராட்சைப் பழம், அதிமதுரம், சீரகம், திப்பிலி ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, மாதுளம்பழம், தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் கூட்டி ஒன்றாகப் பிசைந்து வைத்துக் கொண்டு உள்கொள்ளவும்.

ஏலக்காயைப் பொடித்து வெற்றியிலையைவிட்டுத் தின்ன விக்கல் நிற்கும்.
பிருங்காமலதி தைலம், சந்தனாதி தைலம், அமிருதாதி தைலம், சந்தன பலாலாக்ஷôதிதைலம், நீலிபிருந்காதிதைலம் போன்றவற்றில் ஒன்றை கோடைக்காலத்தில் நான்கு நாள்களுக்கு ஒரு முறையும், குளிர்காலத்தில் எட்டு நாள்களுக்கு ஒரு முறையும், தலையில் தேய்த்துக் குளித்துவர, உடற்சூடு தணிந்து, பித்த எரிச்சல் நன்கு குணமாகும்.

வாஸாகுடூச்யாதி கஷாயம், திராக்ஷôதி கஷாயம், குரூச்யாதி கஷாயம் போன்றவை பித்த சுரப்பியின் இருப்பிடமாகிய கல்லீரல் பகுதியை சுத்தப்படுத்தி, பித்த நீரை நன்கு கட்டுப்படுத்துபவை. மருத்துவர் ஆலோசனைப்படி, சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT