தினமணி கதிர்

திரைக்கதிர்

தினமணி

ஒரு ஜெயிலரின் வாழ்க்கையில் ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் ரஜினியின் "ஜெயிலர்' படத்தின் கதை என்கிறார்கள். இதில் கம்பீரமான ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக வருகிறார் ரஜினி. இந்தாண்டு பொங்கலுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ஆரம்பித்த படப்பிடிப்பு நேபாளம், ராஜஸ்தான் எனச் சென்றது. அதன்பிறகு சமீபத்தில் மங்களூரு சென்று வந்தனர்.  இதுவரை பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருப்பதாகவும் தகவல். படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு முக்கியத்துவம் உள்ளதென்றும், தமன்னாவின் கதாபாத்திரம் குறைவுதான் என்றும் சொல்கிறார்கள். படத்தின் இரண்டு முக்கியமான சண்டைக்காட்சிகளை ராஜஸ்தான் மற்றும் மங்களூரில் எடுத்து முடித்துள்ளனர்.

----------------------------------------------------------------------------------

தனுஷ் புதிய வீட்டில் தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போயஸ் கார்டனில் தனுஷின் இந்த பிரம்மாண்ட வீடு சுமார் ரூ.150 கோடியில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் சுப்ரமணியம் சிவா, ""தம்பி தனுஷின் புதிய வீடு. கோயில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்க்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணரப்படுகிறார்கள். மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள். இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 

----------------------------------------------------------------------------------

தமிழ்த் திரையுலகில் மெகா ஹிட் அடித்த படம் சந்திரமுகி.  இதையடுத்து லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் "சந்திரமுகி 2' படம் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.. ரஜினி நடித்த முதல் பாகத்தில் முக்கியக் கதாபாத்திரமான "சந்திரமுகி' கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தில் தற்போது கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்நிலையில் ஜோதிகாவின் நடிப்புக்கு இணையாக கங்கனா நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கின. இதற்கு பதிலளித்துள்ள கங்கனா ""ஜோதிகா அளவுக்கு என்னால் நடிக்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார். 

----------------------------------------------------------------------------------

ஆண்டுதோறும் நடைபெறும் அண்ணாமலையார் திருகார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும் முன்பதாகவே மயில்சாமி,   திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து தனது திருப்பணிகளையும் தொண்டுகளையும் தீபம் முடியும் வரை அண்ணாமலையார் கோயிலில் இருந்தே செய்வார். இவர் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட், போன்ற சிற்றுண்டிகளை கொடுத்து தனது திருப்பணிகளை, 10 நாள்களும் கார்த்திகை தீப திருவிழா முடியும் வரை செய்து கொண்டே இருப்பார். இவர் திரு அண்ணாமலையார் கோயிலின் 217 அடி உயரமுள்ள ராஜ கோபுரத்துக்கு 217 அடி பூமாலை அணிவித்து அதனை அழகு பார்த்தவர். தீபத் திருவிழாவுக்கு அலங்காரம் மண்டபம், நடராஜர் மண்டபம் போன்ற அனைத்து இடங்களையும் பூக்களால் அலங்காரம் செய்து தோரணங்கள் தொங்கவிட்டு வெகு அழகாக மாற்றுவதுதான் மயில்சாமியின் வேலையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT