தினமணி கதிர்

பேல் பூரி

DIN


கண்டது

(ஒசூர் நேதாஜி சாலையில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் கண்ட 
வாசகம்)

""வாழத்தான் விடவில்லை. வழியையாவது விடு''

-மு.மதனகோபால்,
ஒசூர்.

(திருத்தணி கோயில் அருகே நின்றிருந்த காரின் பின்புறம்)

தாயை  நேசி; தமிழை சுவாசி.

(செங்கல்பட்டு மருத்துவமனை அருகே மருத்துவர் காரின் பின்புறம்) 

அற்புதமான மருந்து சிரிப்பு விலைமதிப்பற்ற செல்வம் உழைப்பு.

(திருத்தணி போட்டோ ஸ்டூடியோ ஒன்றில்)

ஆண்டுகள் போக போக  அழகு கூடுகிறது பழைய புகைப்படங்களுக்கு!

-ஜி.அர்ஜுனன்,  
செங்கல்பட்டு.

கேட்டது


(ஈரோடு மருத்துவமனை ஒன்றில் நோயாளியின் உறவினர்களிடம் மருத்துவர்)


""எதுவாக இருந்தாலும் ஒரு மணி நேரம் கழிச்சுதான் அவரோட நிலைமையைச் சொல்ல முடியும்.''
""டாக்டர். நாலு மணி நேரமா இதையே சொல்லிட்டிருக்கீங்களே..''

- எ.என்.எஸ். மணியன்,
அந்தியூர்.

(தஞ்சாவூர் - முடிதிருத்தம் கடையொன்றில்)

"" என்ன தம்பி.. திடீர்'னு போலீஸ் கட்டிங் பண்ண சொல்றீங்க?''
""என்னை பார்த்து நிறைய பேரு போலீஸ் மாதிரியே இருக்கீங்க'னு சொல்றாங்க.. அதான்!"
" "அது உங்க தொப்பையைப் பார்த்து சொல்லிருப்பாங்க தம்பி.!"

-பா. து. பிரகாஷ்,  
தஞ்சாவூர்.

(மயிலாடுதுறை மல்லியம் கடைத் தெருவில் இருவர் பேசியது)

""சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரன் காலில் விழுந்திடலாம்.''
""அப்படின்னா சண்டை போடுற மனைவிக்குப் பதில் மாமியார் காலில் விழப் போறியா மாப்பிள்ளே''

-ச.க.சரவணன்,
மயிலாடுதுறை.


யோசிக்கிறாங்கப்பா!


ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களுக்கு வயது கூடுகிறது. 
ஆயுள் குறைகிறது.

-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.

மைக்ரோ கதை


சென்னையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, 4 நாள்களுக்குப் பின்னர் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தனது குடும்பத்துடன் வந்து இறங்கினார் ராஜகோபால், ஆட்டோவில் ஏறியவுடன் மனைவி சாந்தியிடம், "" வீட்டுச் சாவியை பையில் இருந்து வெளியே எடுத்து வை'' என்றார்.

பை முழுவதும் தேடியும் சாவி கிடைக்கவில்லை.  இதனால் பதற்றத்துடன், ""ஏங்க! உங்க பையில கொஞ்சம் பாருங்க. சாவி இருக்கா?'' என்றார்.

""நான் என்றைக்கு சாவி வைத்திருந்தேன். கல்யாண வீட்டில போட்டுட்டு வந்துட்டீயா?'' என ராஜகோபால் கடிந்தார்.  குழந்தைகளும் தூக்கக் கலக்கத்தில் சாந்தியை கோபித்துக் கொண்டனர்.

"சரி. கதவை உடைக்க வேண்டியதுதான்!'' என்று கத்தியபடி, வீட்டு வாசல் கதவின் முன் வந்து நின்றார் ராஜகோபால்.  

அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.  வீட்டு வாசல் கதவு சாவி துவாரத்தில்,  4 நாள்களுக்கு முன் வைத்திருந்த சாவி அப்படியே இருந்தது. 

-இரா.சிவானந்தம்,
கோவில்பட்டி.

எஸ்எம்எஸ்

 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தை கற்று தருவதே வாழ்க்கை!

- ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.

அப்படீங்களா!

இணையதளம் என்றால் முதலில் கண்முன் வருவதே கூகுள் தேடுதல் பக்கம்தான். எந்தத் தகவலையும், பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம். பதிவிடும் தகவல்களும், ஜி. மெயிலில் பதிவிடும் தகவல்களும் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தகவல் பாதுகாப்பு இல்லை என்பதால் கூகுள் "இன்காக்னிடோ' என்ற தேடுதளப் பக்கத்தை உருவாக்கியது. 

இதில் நாம் பதிவிடும் தகவல்கள் இணையதள தேடுதல் வரலாறிலும், நாம் பன்படுத்தும் கணினி, கைப்பேசியிலும் பதிவாகாது. 

ஆகையால், இன்காக்னிடோ தேடுதல் இணையதளம் தகவல் பாதுகாப்புக்கான பக்கமாக கருதப்படுகிறது. இந்தப் பக்கத்தை மேலும் பாதுகாப்பாக மாற்ற கைரேகை பதிவு நுழைதலை கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 

தேவைப்படுபவர்கள் மட்டும் இந்தச் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக முதலில் இன்காக்னிடோ பக்கத்தில் உள்ள  செட்டிங்ஸில் சென்று "பிரைவசி - செக்யூரிட்டி டேப்' என்பதை தேர்வு செய்து, "லாக் இன்காக்னிடோ' என்பதை கிளிக் செய்தால் போதும். ரகசிய எண் சரிபார்ப்புடன் இந்த சேவையைப் பயன்படுத்தலாம் ரத்தும் செய்யலாம்.

இணையதளத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காக கூகுள் கொண்டுவந்துள்ள இந்த புதிய சேவை அனைவரின் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT