தினமணி கதிர்

திரைக் கதிர்

தினமணி


இன்னும் நாலைந்து படங்களில் நடித்து முடித்த பிறகு நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் பட உலகில் இருந்து விலகி விடாமல் தொடர்ந்து பட தயாரிப்புகளில் ஈடுபட போகிறார். இப்போது அவர், அட்லியின் இந்திப் படமான "ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். அதனால், அவர் தயாரிப்பதாக இருந்த படங்களை தொடங்காமல் தள்ளி வைத்துள்ளார். நயனின்  காதல் திருமணம், சுற்றுலா என செல்வதால்  இப்போது வேலைகள் போட்டது போட்டபடி நிற்கின்றன.

கோலிவுட்டில் பல நடிகர்களின் காதல் குறித்து தகவல் கிளம்பும் போதெல்லாம் முதலில் மறுப்பார்கள். பின்னர், அந்த தகவலை உறுதி செய்யும் விதத்தில் திருமணம் வரை செல்வார்கள். சினேகா - பிரசன்னாவில் இருந்து இப்போது கெüதம் கார்த்தி - மஞ்சிமா வரை நாம் பார்த்து வரும் காதல்கள்தான். இப்போது புது காதல் ஜோடிகளாக சித்தார்த்- அதிதிராவ் ஜோடியை சொல்கிறார்கள்.

கெளதம் மேனன், கமல் கூட்டணியின் "வேட்டையாடு விளையாடு 2' அடுத்தாண்டு துவங்குகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தின் கதை இதுதான் என ஒரு கதை கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் கமல் டெப்டி கமிஷனர் ராகவனாக இருப்பார். இரண்டாம் பாகத்தில் அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகி விடுவார். 

இயக்குநர் வெங்கட்பிரபு- நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.  படத்துக்கு "என் சி 22' எனத் தலைப்பிட்டுள்ளனர்.  இது  நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு படம். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் தெலுங்கில் இயக்குநராக இது முதல் படம் என்பது  குறிப்பிடத்தக்கது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிக்கும் படம் "மாமன்னன்'. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார்.  வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT