தினமணி கதிர்

தயாரிப்பாளரான ஹீரோயின்கள்!

25th Sep 2022 06:00 AM | டெல்டா அசோக்

ADVERTISEMENT

 

ஒரு படம் பெரிய வெற்றி அடைந்தாலும், தோல்வியுற்றாலும் லாபமடைவதும் பாதிக்கப்படுவதும் தயாரிப்பாளர்கள்தான். பல நிர்பந்தத்தோடு நடிப்பதற்குப் பதில் நாமே படத்தைத் தயாரிக்கலாமே எனப் பல ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளனர். தொடர்ந்து, ஹீரோயின்கள் பலரும் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். பட்டியல் இதோ:

தீபிகா படுகோன்

கன்னடப் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் தலைக்காட்டி வரும் தீபிகாவுக்குச் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்க வேண்டும் என்பதில் ஆசை. முதல் படமே இந்தியா முழுமைக்குமான "பான் இந்தியா' படமாக உருவெடுக்கவுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங் அல்லது கங்குலியின் வாழ்க்கை குறித்த படங்கள் குறித்த யோசனையிலும் அவர் உள்ளார்.

ADVERTISEMENT

நயன்தாரா

"அறம்' படமே நயன்தாராவின் தயாரிப்புதான். தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சமீபத்தில் "காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை தயாரித்தார். இனி நல்ல கதைகளாக தயாரிக்க திட்டமிட்டுள்ள அவர், தற்போது தயாரித்துள்ள "கூழாங்கல்' என்ற படம் சர்வேதச மேடைகளை
அலங்கரித்து வருகிறது.

ஸ்ருதிஹாசன்

வித்யுத் ஜம்வாலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். "லென்ஸ்' படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் இராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் "தி மஸ்கிட்டோ பிலாஸபி' என்ற படத்தைத் தனது "இஸிட்ரோ மீடியா' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடவிருக்கிறார்.

காஜல் அகர்வால்

திருமண வாழ்க்கைக்குள் சென்ற காஜல், சினிமாவைத் தவிர்த்து, ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார். படத் தயாரிப்பிலும் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது.

நஸ்ரியா

ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்குப் பை பை சொன்னார். சிறிய இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருப்பவர், அஞ்சலி மேனன் இயக்கத்தில் "கூடே' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தவிர, தன் கணவர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் "வரதன்' என்ற படத்தையும், அறிமுக இயக்குநர் ஒருவரின் "கும்பலங்கி நைட்ஸ்' என்ற படத்தையும் தயாரிக்
கிறார்.

கீர்த்தி சுரேஷ்

சாவித்ரிவின் வாழ்க்கை வரலாற்றுக் கதை, "பென் குயின்' ஆகிய படங்களில் தன் நடிப்பை நிரூபித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவருக்கு சொல்லப்பட்ட ஒரு த்ரில்லர் கதை மிகவும் பிடித்து விட்டதாம். கதை தென்னிந்திய முழுமைக்குமான சினிமாவாக உருவெடுக்கவுள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளில் அவர் இறங்கியிருப்பதாகவும், அதற்கான திறமையான நபர்களைத் தேர்வு செய்து நியமிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அமலாபால்

அமலாபால் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் "கடாவர்'. கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிவுள்ளது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலாபாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். கதை ஒரு கட்டத்தில் பிடித்துப் போக வேறு யாரும் தயாரிக்க முன் வராத காரணத்தால் தானே தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார் அமலாபால். இனி தொடர்ந்து இது மாதிரியான கதைகளை அவர் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா

2008-ஆம் ஆண்டில் "ரப்னே பனா தி ஜோடி' மூலம் முதல் படத்திலேயே ஷாரூக்கானுக்கு ஜோடியாக அறிமுகமானவர். ஆண்டுக்கு இரு படங்கள் நடிக்கிறார்.

அமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் எனப் பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். பிறகு, தான் நடித்த "என் எச் 10' படத்தின் மூலமாக "கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். பின், "ஃபில்லௌரி', "பரி' எனத் தன்னை மையப்படுத்திய கதைகளை மட்டும் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் மூன்று படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.

பிரியங்கா சோப்ரா

யுனிசெஃப் அமைப்பின் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க சீரிஸ்களிலும் பிஸியாக இருக்கும் இவருக்கு மராத்தி, அஸாமி படங்கள் மீது ஆர்வம் அதிகம். "பர்பிள் பெப்பில்' என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி மராத்தி, அஸாமி, போஜ்பூரி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இதுவரை 9 படங்களைத் தயாரித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT