தினமணி கதிர்

பேல் பூரி

25th Sep 2022 06:00 AM

ADVERTISEMENT

 


கண்டது


(தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட கயத்தாறு அருகேயுள்ள ஓர் கிராமத்தின் பெயர்)

தலையால் நடந்தான் குளம்

-எஸ்.மோகன்,
கோவில்பட்டி.

ADVERTISEMENT

 

(தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட பேராவூரணி - சேதுபாவாசத்திரம் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

செருப்பாலகாடு

-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.

 

(பல்லாவரம்- பம்மல் சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

அடுப்புக்கரி

-சம்பத்குமாரி,
பொன்மலை.

 

கேட்டது


(திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பேருந்து ஒன்றில் பெண்ணும், இளைஞரும்..)

""என்னைப் பார்த்து "பாட்டி'-ங்கறே.. நான், என் மக, என்பேத்தி மூணு பேரும் பஜாரில் போகும்போது என்ன கேப்பாங்க தெரியுமா?''
""சொல்லுங்க...?''
""மகளை தங்கச்சின்னும், பேத்தியை மகளான்னும்தான் கேப்பாங்க...! தெரிஞ்சுக்கோ''

-கோ.வினோத்,
திருநெல்வேலி.

 

(மன்னார்குடி, ஸ்வீட்ஸ்டால் ஒன்றில் உரிமையாளரும் நண்பரும்)

"டேஸ்ட் பார்க்க சாம்பிள் கொடுத்தே கடை காலியாயிடுதுன்னு அலுத்துக்கிறியே, இந்த ஸ்வீட் கடையை மூடினாலும் பொழப்புக்கு வேற என்ன கடை வைப்பே?'
"ம்....பூச்சிமருந்து கடை தான்வைக்கணும். அப்போதான் சாம்பிள்னு யாரும் கையை நீட்ட மாட்டாங்க.....'

- ப.ராஜகோபால்,  
மன்னார்குடி.

 

(ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட சுந்தரமுடையானில்...)

""உங்க பையனுக்கு எப்பவுமே சாப்பாடு நினைப்புதான்!''
ஏன் அப்படி சொல்றீங்க.
""டெபனட்லி-ன்னு எழுத சொன்னா "டிபன் இட்லி'-ன்னு எழுதுறானே...!''

-மு.நாகூர்,
சுந்தரமுடையான்.

 

யோசிக்கிறாங்கப்பா!


விடியும் என்று காத்திருக்காதே! 
முடியும் என்று முயற்சி செய்!!

-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.

 

மைக்ரோ கதை

பாஸ்கர் வீட்டுக்கு அவருடைய நண்பர் ரவீந்திரன் சென்றார். நான்கு நாளைக்கு முன்பாக காரில் இருந்து கீழே இறங்கும் போது கல் தடுக்கி விழுந்து காலில் வீக்கம் ஏற்பட்டு, வீட்டில் ஓய்வு எடுப்பதாக கேள்விப்பட்டு நண்பர் பாஸ்கரை விசாரிக்க வந்திருக்கிறார்.

""இப்போது வீக்கம் குறைந்து இருக்கிறதா... வலி இல்லையே?'' என அன்பாக விசாரித்தார் ரவீந்திரன்.

""அப்படியெல்லாம் பெரிசாக ஒன்றும் இல்லை ரவி. கால் வீக்கம் தான் இன்னும் 
வத்தவில்லை!''

""காலை தொங்கப் போட்டு கொண்டு இருக்கக் கூடாது. மஞ்சனத்தி இலைகளை பறித்து வந்து அவித்து, அந்த இலைகளை வீக்கத்தில் ஓட்டினால் வீக்கம் குறையும் என்பார்கள்!''

""மருந்து மாத்திரைகள் ஒழுங்காக எடுத்துக் கொண்டு வருகிறேன். அதனால் வீக்கம் குறைந்து வருகிறது!''  என்றார் பாஸ்கர்.

""சரி சரி! வீட்டுக்குள் அதிகமாக நடை வேண்டாம். நன்றாக ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் பாஸ்கர்!''

""கீழே விழுந்து காலில் வீக்கம் ஏற்பட்டது முதல் வீட்டில் தான் இருக்கிறேன்.  என் "கிளினிக்' குக்கு கூட போகவில்லை.  என் உதவி டாக்டர்களிடம் சொல்லி பேஷன்டுகளை கவனிக்கச் சொல்லி இருக்கிறேன்!'' என பாஸ்கர் சொன்னதும் ரவீந்திரன் முகத்தில் திருப்தி.

""உங்களுக்கு நான் சொல்லவா வேண்டும். நீங்களே ஒரு டாக்டர்! கவனமாக இருந்து குணப்படுத்தி கொள்ளுங்கள்!''  என நண்பர் பாஸ்கரிடம் சொல்லிவிட்டு விடை பெற்றார் ரவீந்திரன்.

-கு.அருணாசலம்,
தென்காசி.

 

எஸ்எம்எஸ்

இன்பமான வாழ்க்கைக்காக, 
துன்பத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்.

-மு.பெரியசாமி,  
திருத்துறைப்பூண்டி.

 

அப்படீங்களா!


கணினியை சுலபமாக இயக்க முக்கிய கருவியாக பயன்படும் மவுஸ், தற்போது  பணியாளர்களின் கூடுதல் நேர பணிச்சுமையை உணர்த்தும் கருவியாகவும் மாறப்போகிறது. 

கணினியின் பயன்பாடு இல்லாத துறையே இல்லை என்ற காலம் மாறியுள்ள நிலையில், பணியாளர்கள் நீண்ட நேரம் கணினி முன் பணியில் மூழ்கி விடுகிறார்கள். இதனால் மன அழுத்தத்துடன் பல்வேறு வகையிலான உடல்நலத்தில் சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.

இவர்களில் சீனர்களும், கொரியர்களும் தான் அதிகம். அதிக நேரம் தூங்குபவர்
களுக்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்படும் என்று சீன நிறுவனம் அறிவிதுள்ளதன் மூலம் இதன் தாக்கத்தை புரிந்து கொள்ளலாம். 

இப்படிபட்டவர்களுக்கான பிரத்யேக மவுûஸ சாம்சங் நிறுவனம் தயாரித்து வரு
கிறது. பணி நேரம் முடிவடைந்தவுடன் இந்த மவுஸ் மீது கையை வைத்து இயக்க முடியாது. கையை அருகே கொண்டு சென்றாலே அங்கிருந்து ஓடிவிடும். பார்ப்பதற்கு நிஜ எலியைப் போன்றே இருக்கும் இதற்கு "பேலன்ஸ் மவுஸ்' என பெயரிப்பட்டுள்ளது. அதாவது வாழ்க்கையும் - பணியையும் சீராக வைப்பதாகும். 

இந்த மவுஸ் தொடர்பாக சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதில் ஒருவர் தனது பணி நேரம் முடிந்தும் பணியாற்ற முற்படும்போது, மவுûஸ கிளிக் செய்யும் இரண்டு பொத்தன், எலியின் காதுகளைப்போல் எழும்பி ஓட ஆரம்பிக்கிறது. மவுûஸ அவர் துரத்திச் சென்று பிடிக்க முற்பட்டாலும் முடியவில்லை. 

தென் கொரிய கணினி மார்க்கெட்டில் இந்த மவுஸ் அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் எப்போது இது சந்தைக்கு வரும் என்று சாம்சங் நிறுவனம் அறிவிக்கவில்லை.  

-அ.சர்ப்ராஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT