தினமணி கதிர்

திரைக் கதிர்

தினமணி


"பொன்னியின் செல்வன்'  படத்தின் வெளியீட்டிற்கு முன்பு தஞ்சை பெருவுடையார் கோயிலுக்குச் சென்று ஆசி பெறப்போவதாகப் பதிவிட்டுள்ளார் விக்ரம். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்.... கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோரின் கதாபாத்திர பெயர்களை பதிவிட்டு....  "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?

குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா, வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!' என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

----------------------------------------------------

அஜித்தின் பெயரிடப்படாத "அஜித்-61' படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினடத்தில் நடந்து. தொடர்ந்து ஒடிஸாவில் நடந்த நிலையில் திடீரென படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டு விட்டார்கள். அஜித்தோ பைக்கில் லடாக், இமயமலை என ரிலாக்ஸ் ட்ரிப் அடிக்க சென்று விட்டார். பொதுவாக படப்பிடிப்பில் முழுக்க கவனம் செலுத்தும் அவர், இப்படி  படப்பிடிப்பு நடுவே பைக்கில் கிளம்பிப் போனது ஏன் என பலரும் திகைக்கிறார்கள்.  

----------------------------------------------------

மாதத்தில் பாதி நாள்கள் மும்பையில் இருக்கிறார் விஜய் சேதுபதி. மூன்று படங்களில் நடித்து வருவதால் இந்த ஏற்பாடு. அவருக்காக பிரமாண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஒரு தனி பிளாட்டையே ஒதுக்கிக் கொடுத்து இருக்கிறார்கள். அதிலேயே தங்கிக் கொள்கிறார். தமிழ்நாட்டு உணவுக்காக சமையல்காரர் ஒருவர் அவருக்கு உணவை தயாரிக்கிறார். இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னைக்கு வந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார். 

----------------------------------------------------

விக்ரம்' படம் தந்த லாப உற்சாகத்தில் சினிமாவை இன்னும் நேசிக்க தொடங்கி இருக்கிறார் கமல். தொடர்ந்து படங்கள் தயாரிப்பதிலும், நடிப்பதிலும், பிறர் நடிக்க படங்கள் தயாரிப்பதிலும், ஆர்வமாக இருக்கிறார்.   அடுத்தடுத்து மல்டி ஸ்டார்களுடன் இணைந்து நடிக்கும் திரைக்கதைகள் அவரிடம் தயாராக இருக்கின்றன. இதற்காக சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என மூன்று பேரிடம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.

----------------------------------------------------

ந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு " கிக்'  என்று பெயரிட்டுள்ளனர். இதன் படப் பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது.  ஒரே கட்டமாக சென்னையில் நடந்து தொடர்ந்து இதன் படப்பிடிப்பு பாங்காங்கில் 15 நாள்கள் நடைபெற்று, படப்பிடிப்பு முடிவடைந்தது.  இப்படம் மூலம், கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் தமிழில் அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான "லவ்குரு',  "கானா பஜானா' ,  "விசில்',  "ஆரஞ்ச்' போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார். தன் யா ஹோப் ஹீரோயின். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT