தினமணி கதிர்

திரைக்  கதிர்

2nd Oct 2022 06:00 AM

ADVERTISEMENT

 

மறுபடியும் ஏ.வி.எம். நிறுவனம் பட தயாரிப்பை தொடங்கப் போகிறார்கள். அதற்கான திரைக்கதையை முக்கியமான இளம் இயக்குநர்களிடம் கேட்டு இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பாக சிலரை சேர்த்து கொள்ளவும் திட்டமிட்டுருக்கிறார்கள்.  ஏ.வி.எம். சரவணன் இதற்கான முக்கியமான ஹீரோக்களிடம் பேசியிருக்கிறார். அதற்கு முன்னதாக பெரிய பட்ஜெட்டில் இல்லாமல் மீடியம் பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
 

சூர்யா - "சிறுத்தை' சிவாவின் "சூர்யா42' படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இதற்கிடையே பாலாவின் படம் எப்போது மீண்டும் துவங்கும் எனவும் கேட்க ஆரம்பித்துள்ளனர். பாலாவின் கதையில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் திரைக்கதையை வேறு மாதிரியாக மாற்றிவிட்டார். அவர் முதலாவதாக செய்த தசை அதிக உடல் உழைப்பை வேண்டுவதாக இருந்தது. அதிகம் சிரமப்பட்டார் சூர்யா. இப்போது மாற்றம் நிகழந்துள்ளதால் விரைவில் படப்படிப்பு முடியும் எனத் தெரிகிறது.
  

பாலிவுட்டில் வெளியான "தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட விருக்கிறது. 

ADVERTISEMENT

 

அடுத்த படத்திற்காக டாப்ஸியை அழைத்திருக்கிறார் வெற்றிமாறன். "வணக்கம்' சொல்லிவிட்டு "சாரி' என்று சொல்லிவிட்டாராம் டாப்ஸி. "ஹிந்தியில் பயங்கர பிஸி. இவ்வளவு நாள் கால்ஷீட் ஒதுக்க முடியாது' என்று காரணம் காட்டிவிட்டாராம். சொந்தமாகப் படம் தயாரிக்க ரெடியாகும் டாப்ஸியின் கால்ஷீட் இப்போது மும்பைக்காரர்களுக்கே கிடைப்பதில்லை. ஷாருக்கான் } ராஜ்குமார் ஹிரானி படத்திலும் நாயகி அவரே! அவர் தொட்டது எல்லாம் துலங்குவது ஒரு காரணம் என்கிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT