தினமணி கதிர்

சிரி... சிரி... 

2nd Oct 2022 06:00 AM

ADVERTISEMENT

 

""உங்க வீட்டுல கார் வசதி இருந்தும், உங்கப்பா ஏன் நடந்து போய் பேங்கில் லோன் கேட்டார்?''
""அவர் கேட்டு போனது கால்நடை லோனாம்''

-ஆர்.சுப்பு, 
திருத்தங்கல்.

 

ADVERTISEMENT

""டாக்டர்.. என் வீட்டுக்காரர் ராத்திரி தூக்கத்திலே சிரிக்கிறார். ஒன்றும் புரியலையே..''
""போகட்டும்மா.. தூக்கத்தில்தானே சிரிக்கிறார். விட்டுடும்மா..''

-வண்ணை கணேசன், 
சென்னை-10.

 

""ஏன்? அந்தக் கல்யாண வீட்டுல ரெண்டு முறை சாப்பிட்டே...!''
""பக்கத்து வீட்டு ராமு கல்யாணத்துக்கு வரலை. அவன் மொய் கவரை என்கிட்ட கொடுத்தான்.  அவனுக்கும் சேர்த்து சாப்பிட்டேன்!''

-கே.இந்து குமரப்பன், 
விழுப்புரம்.

 


""பால் வியாபாரத்தை விரிவுபடுத்த பணம் வாங்கி என்ன பண்ணப் போறே..?''
""தண்ணீர் லாரி வாங்கணும்...''

-ஏ.பாரூக், 
திருநெல்வேலி.

 


""இந்தக் கண்ணாடி போட்டா, தமிழ்ப் புத்தகங்கள் எல்லாம் வாசிக்க முடியுமா டாக்டர்..!''
""உங்களுக்குத் தமிழ் தெரியுமா, தெரியாதா என்பதைப் பொருத்ததும்மா...''

-சாய் ஜனனி, 
பூந்தமல்லி.

 

 

""இன்னிக்கு என்னோட ராசிக்கு வெற்றின்னு போட்டிருக்கே..?''
""அதெயெல்லாம் நம்பி நீங்க உங்க மனைவியோட சண்டை போடாதீங்க..''

- தீபிகா சாரதி, 
சென்னை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT