தினமணி கதிர்

பேல் பூரி

2nd Oct 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கண்டது

( தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு ஊரின் பெயர்கள் )

""தாய்விளை, பிள்ளைவிளை''

-க.சரவணகுமார்,  
திருநெல்வேலி.

ADVERTISEMENT

 

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

""மிளகுமூடு''

-கே.எல்.புனிதவதி,
கோவை.

 

(தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட கயத்தாறு அருகேயுள்ள ஓர் கிராமத்தின் பெயர்)

பன்னீர்குளம்

-மு.மதனகோபால்,
சூர்.

 

கேட்டது


(துபை  ஷாப்பிங் மால் ஒன்றில் இரு நண்பர்கள் பேசிக் கொண்டது)

""மச்சான்..  நான்  "டின்' பீர் குடிக்கற விஷயம் ஊர்ல என்  பொண்டாட்டிக்குத் தெரியாது''
""ஜாக்கிரதை மாப்பிள, தெரிஞ்சா "டின்' கட்டிடப்போறா!''

- எஸ்.மதுசூதனன்,
துபை.

 

(திருச்சி பூச்சந்தையில் வியாபாரியும், பெண்ணும் பேசியது)

""என்னப்பா பூ தனியா காம்பு தனியா இருக்கு?''
""இது "பிச்சி'ப்பூம்மா அப்படித் தான் இருக்கும்!''

-சிவம்,
திருச்சி.

 

(கள்ளக்குறிச்சியில் ஓர் அடகுக் கடை முன்பு தம்பதி பேசிக் கொண்டது)

""என்னது.. நகை எல்லாத்தையும் பேக்ல வைச்சி எடுத்துட்டு வான்னு சொன்னா, எல்லாத்தையும் மாட்டிக்கிட்டு வந்திருக்க?''
""ஆமாம் இந்த நகை எல்லாம் அடகு வைச்சிட்டு  மீட்க எத்தனை வருசம் ஆகுமோ?''

-சாய் செந்தில்,
சங்கராபுரம்.

 

யோசிக்கிறாங்கப்பா!

ஆயிரம் முள்கள் தன் உடம்பில் இருந்தாலும் 
ஒரு தூண்டில் முள்ளிடம் தோற்றுப் போகிறது - மீன்!

- தி. பச்சமுத்து,  
கிருஷ்ணகிரி.

 


மைக்ரோ கதை

ஓர் ஹோட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்,  ""சூடா என்னப்பா இருக்கு?''  என்று கேட்டார்.
இதற்கு சர்வர், ""எல்லாமே சூடாத்தான் இருக்கு, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க.?'' என்றார்.
கடுப்பான  வாடிக்கையாளர், காப்பி கொண்டாப்பா' என்றார்.
கொடக்கண்டனான சர்வர், ""டிகிரியா? , சாதாவா?'' என்றார்.
""சாதாவையே டிகிரி மாதிரி போட்டு எடுத்திட்டு வாப்பா...!'' என்றார் வாடிக்கையாளர்.
" "லைட்டா ? ஸ்டிராங்கா சார்?''
" "மீடியம் ...!''
""தமிழ் மீடியமா ?,  இங்கிலீஷ் மீடியமா?''
கோபம் உச்சிக்கு ஏற,
"எனக்கு காப்பியே வேண்டாம்....நான் வரேன்...!' என்று கிளம்ப,
நம்ப ஆள், "என்ன சார் வரேன்னு சொல்லிட்டு,  போறீங்களே..?' என்றாரே பார்க்கலாம்?'

-வி. ரேவதி,
தஞ்சை

 

எஸ்எம்எஸ்


பூட்டினாலும், பூட்டாமல் போனாலும் 
பூட்டுக்கு பூட்டுன்னுதான் பேரு!

-பி.கோபி,  
கிருஷ்ணகிரி.

 

அப்படீங்களா!

ஓரிடத்தில் இருந்தவாறே உணவு உள்ளிட்ட எந்தவிதமான பொருளையும் பெறுவதற்கு பல்வேறு இணையவழி செயலிகள் உள்ளன. எனினும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டால் நமக்கு வந்து சேர வேண்டிய உணவுப் பொருள் தாமதமாகதான் கிடைக்கும்.  இதைத் தவிர்க்க சில நாடுகளில் பீட்சா உள்ளிட்ட பொருள்களை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன.

தற்போது இந்த வரிசையில் புதுமையாக பறக்கும் மனிதன் உங்கள் வீட்டின் பால்கனிக்கு வந்து உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் சேவையும் தொடங்கப்படுகிறது. சவூதி அரேபியாவில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெட்பேக் உடையணிந்து ஹாலிவுட் சினிமாக்களில் பார்ப்பதைப்போல் பறந்து வந்து பால்கனியில் இறங்கி உணவு ஆர்டரை பெண்மணியிடம் வழங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அவர் உயரமான கட்டடத்தின் வீட்டுக்குவீடு சென்று, இருசக்கர வாகனத்தில் உணவு விநியோகம் செய்வதைப்போல் செய்து வருகிறார்.

இந்த பறக்கும் மனிதனின் சேவை திட்டம் தொடங்கப்படவில்லை என்றாலும் இது விரைவில் அமலுக்கு வரும் என்றே எதிர்பார்க்கலாம். 

வீட்டிற்கு வெளியே காலிங் பெல் மாட்டுவதைப்போல், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் பால்கனியிலும் காலிங் பெல் பொருத்தும் காலம் விரைவில் வரும்.

-அ.சர்ப்ராஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT