தினமணி கதிர்

பேல்பூரி

DIN


கண்டது
 

(காரைக்கால்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்உள்ள ஓர் ஊரின் பெயர்)

கற்கத்தி

-ம.ஸ்ரீகிருஷ்ணா,
மேலமங்கைநல்லூர்.

(குடியாத்தம்- பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

லண்டன்பட்டி

- எஸ்.ஸ்ரீதரன்,
சத்துவாச்சாரி.

(தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ள ஓர் ஊரின் பெயர்)

கலங்காத கண்டி

-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை-74.

கேட்டது


(தஞ்சாவூர் மேல வீதியில் மூதாட்டியும்,இளம்பெண்ணும்)


""ஏண்டிம்மா! நெத்தியில விழற அந்த ஒத்த முடியை சதா, தள்ளி விட்டுக்கிட்டே இருக்கியே! ஏன்?'' ""நல்லா ஒதுக்கி விடு, இல்லைன்னா,கத்தரியாலக் கத்தரிச்சி விடு!''

""பாட்டி,'இந்த ஒத்த முடி நெத்தியில விழறதுக்கு பியூட்டி பார்லர்ல காசு கொடுத்து எவ்வளவு செலவு பண்ணியிருக்கேன்னு தெரியுமா?''

- மதுரை முருகேசன்,
தஞ்சாவூர்.

(திருவாரூர் திருமண மண்டப சமையல்கூடத்தில் இருவர்)

""ஏண்டா! சாம்பார் குண்டானை அடியோட கிண்ட தெரியாதா? மேலோட்டமாக கிண்டியிருக்கே?''

""அவனுக்கு இதெல்லாம் கிண்ட தெரியாது மாஸ்டர். இதுவே நமக்கான பிரச்னையினா அடியோடு கிண்டி எடுப்பான்''

-மு.தனகோபாலன்,
திருவாரூர்.

(செங்கல்பட்டில் உள்ள ஒரு வங்கி வாசலில் இருவர்)

""லோன் உனக்கு சாங்சன் ஆயிடுச்சா ?''
""இல்லடா?''
""ஏன்?''
"" என்ன லோன்னுன்னு கேட்டாங்க ! வர்ற கடன்னு சொன்னேன்டா?''

- ஜி.அர்ஜுனன்,
செங்கல்பட்டு.

யோசிக்கிறாங்கப்பா!


"கார்டு' போட்டு "காசு' எடுத்தா, அது ஏ.டி.எம். !
"காசு' போட்டு "கார்டு' எடுத்தா அது "வெயிட் பார்க்கும் மெஷின்'!

-சம்பத்குமாரி,
பொன்மலை.

மைக்ரோ கதை


ஒருவருக்குத் திடீர் சந்தேகம் வந்தது. தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ? என்பதுதான்அது. நேரடியாகக் கேட்கத் தயக்கம் மட்டுமல்ல; பயமும்தான். அவரின் குடும்ப மருத்துவரிடம் சொன்னார். அதற்கு மருத்துவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .

""இருபது அடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப் பாருங்கள். மனைவியின் காதில் விழவில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள். பின்னர் குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள். எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்'' என்றார் மருத்துவர். அதைக் கேட்டவுடன் அந்தக் கணவனுக்கு ஒரே குஷி.

உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம், "" இன்று என்ன சமையல்?'' எனக் கேட்டார். பதில் எதுவும் இல்லை. பின்னர், சிறிது, சிறிதாக நுழைந்து கேட்டுக் கொண்டு சென்றும் பதில் இல்லை.

"போச்சு. இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டது போல?' என்று முடிவு செய்துவிட்டார். கடைசி வாய்ப்பாக மனைவியின் காது அருகே சென்று சத்தமாக, "" இன்றைக்கு என்ன சமையல் ?'' எனக் கேட்டார்.

உடனே கோபமாய் மனைவி சொன்னார்.

""ஏன் இப்படி கத்துறீங்க! , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்லிக்கிட்டே இருந்தேனே , அது உங்கள் காதில் விழவில்லையா ? காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்கீங்க?'' எனப் பொரிந்துத் தள்ளிவிட்டாள்.

- ஜி. மஞ்சரி,
கிருஷ்ணகிரி.

எஸ்எம்எஸ்

வாழ்க்கையில் உயர பறக்க நினைப்பது தவறல்ல!
உடனே பறக்க நினைப்பதுதான் தவறு.

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

அப்படீங்களா!


ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் தினசரி வாழ்வுடன் ஒன்றிணைந்துவிட்டது வாட்ஸ் ஆஃப் செயலி. மக்களின் அன்றாட பணிகளுக்கு ஏற்ப புதிய சேவைகளையும் மெட்டா நிறுவனமும் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.

தற்போது புதிய சேவையாக "போல்' எனப்படும் கருத்துக் கணிப்பு முடிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தனிநபரின் கணக்கிலும், பல்வேறு உறுப்பினர்கள் இணைந்துள்ள குழுவிலும் நடத்தலாம்.

இந்தச் சேவையை செயலாக்கம் செய்ய, "அட்டாச்' ஐகானை கிளிக் செய்து, புதிதாக இணைக்கப்பட்டுள்ள "போல்' ஐகானை தேர்வு செய்ய வேண்டும். அதில் நாம் நடத்தப்போகும் கருத்துக் கணிப்பின் தலைப்பு கேள்வியை பதிவிட வேண்டும்.

இதற்கான பதில்களாக 12 தேர்வுகளை நாம் பதிவிடலாம். இதில் பதிவிட்ட பதிலையை மீண்டும் பதிவிட்டால் வாட்ஸ்ஆஃப் எச்சரிக்கை தகவலை அளிக்கும்.

இதில் குழுவில் உள்ளவர்கள் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள பதில்களை தேர்வு செய்யலாம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களையும் தேர்வு செய்ய வசதி உண்டு.

இதில் எந்தப் பதிலுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பது பதிலுக்கு அருகே தெரிந்துவிடும். அதிலும், யார் எந்த பதிலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.

"அலுவலகக் கூட்டத்தை எத்தனை மணிக்கு நடத்தலாம், ஆலோசனையின் தலைப்பு' போன்ற உறுப்பினர்களின் பெரும்பாலான கருத்துகளை குழு அட்மின்கள் இந்த கருத்துக் கணிப்பு மூலம் எளிதாக தெரிந்து கொள்ள உதவுகிறது.

மேலும், வாட்ஸ்ஆஃப் கணக்கை ஸ்மார்ட் போனிலும், கணினியிலும் இணைக்கும் வசதி உள்ளதைப்போல் ஒரே கணக்கை இரு போன்களில் இணைக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆஃப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஒரே கணக்கின் "க்யூஆர் கோடு'வை இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்கேன் செய்தால் போதும். இந்த சேவை தற்போது பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

- அ.சர்ப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT