தினமணி கதிர்

சிரி... சிரி...

DIN


""எங்க வீட்டு வேலைக்காரி அக்கம்பக்கத்து செய்திகளை இப்போ பேப்பரில் டைப் பண்ணி கொடுத்துடுறா?''
""ஏன் ?''
""உட்கார்ந்து சொல்லிக்கிட்டு இருக்க அவளுக்கு நேரமில்லையாம்!''

இரா. அருண்குமார்,
 புதுச்சேரி.

""கை கால் நல்லா இருக்கறப்ப பிச்சை யெடுக்கிறியே...கேவலமா இல்லையா?''
""அதெல்லாம் பாத்தா நாலு  "பிளாட்" வாங்க முடியுமா தாயி''


அ.செந்தில்குமார்,  
சூலூர்.

""அந்தக் குடை விற்பனை பண்ற கடையில் கூட்டம் அதிகமா இருக்கே ஏன்?''
""குடையை விரிச்சா பாட்டு பாடுமாம் அதான்''

பி.பரத்,
சிதம்பரம்.

""அப்பா.. மாம்பழத்துக்கு மூக்கு இருக்குமா?''
""அது எப்படிடா இருக்கும்''
""பின்னே ஏன்? கிளிமூக்கு மாம்பழம் 
சொல்றாங்க!''

-பி.கனகராஜ்,
மதுரை.

"அந்த பேன்சி கடைக்காரர் ரொம்ப அப்-டேட்டா இருக்கிறாரா?''
""ஆமா! இங்கு குந்தவை கொண்டை கிடைக்குமுன்னு போர்டு வைச்சு இருக்காரே!''

மா.சந்திரசேகர்,
மேட்டுமகாதானபுரம்.

""வீட்டு வேலை செய்ய முடியல.  நல்ல வேலைக்காரிய பார்த்து அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னா...''
""என்ன பண்ணிணார்''
""ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கார்''

வண்ணை கணேசன்,
சென்னை-110.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பாலாபிஷேகம்

SCROLL FOR NEXT