தினமணி கதிர்

சிரி... சிரி... 

22nd May 2022 06:00 AM

ADVERTISEMENT


மரம் நடுவிழாவில் தலைவர்கூட இருப்பவர் யாரு?
கூடவே இருந்து குழி பறிப்பவர்!

-ஆர்.சுந்தரராஜன், 
சிதம்பரம்.

 

என்னடா ஆச்சு..! உன் காது இப்படி பிள்ளையார் காது மாதிரி ஆயிடுச்சே..!
டைட்டான மாஸ்க் போட்டு அப்படி ஆயிடுச்சுடா!

ADVERTISEMENT

-சம்பத்குமாரி, 
பொன்மலை.

 

அந்தச் சாமியாரை ஏன் எல்லோரும் திட்டுறாங்க..!
மந்திரத்தால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறேன்னு சொன்னாராம்.

-அ.சுஹைல் ரஹ்மான், 
திருச்சி.

 

என் பொண்ணுக்கு வீட்டோட மாப்பிள்ளை கிடைக்குமா?
மாப்பிள்ளை வேணும்னா கிடைக்கும். வீடெல்லாம் கிடைக்காதுப்பா...?

-தீபிகா சாரதி, 
சென்னை 5.

 

இயக்குநர்: இந்த சீரியலில் உங்களுக்கு கணவர் வேடம்?
நடிகர்: டயலாக் பேசற மாதிரி வேற கேரக்டர் இல்லையா சார்?

 

இயக்குநர்: சீரியலுக்கு இந்தக் கதை ஏற்றதில்லை.
கதாசிரியர்: ஏன்? நம்பும்படி இல்லையா?
இயக்குநர்: விம்மும்படி இல்லை..!

-எம்.அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி.

ADVERTISEMENT
ADVERTISEMENT