தினமணி கதிர்

சிரி... சிரி...

15th May 2022 06:00 AM

ADVERTISEMENT

 

வங்கி மேலாளர்: ஏன்யா.. மாடு வாங்க லோன் கேக்கறியே... எப்படி கட்டுற மாதிரி..!
வாடிக்கையாளர்: இதென்ன சாமி! கம்ப சூத்திரம் கயிறு போட்டுதான்..!
வங்கி மேலாளர்: அடப்பாவிங்களா?

-விஜி,
சென்னை. 10.

 

ADVERTISEMENT

 

வள்: அந்த அதிகாரி கிட்ட பேசும்போது மட்டும் ஏன் மாஸ்க்கை கழட்டிட்டே?
இவள்: பல்லை காட்டி பேசினால் தான் அவர்கிட்ட காரியமாகும்னு சொன்னே!

-ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்.

 

 

அவர்: மனைவியைவிட  அவளோட புடவைகள்தான் மரியாதை கொடுக்குது!
இவர்: எப்படி?
அவர்: பீரோவைத் திறந்தால் அதுதானே நம்ம காலில் விழுது!

-உமர்,
கடையநல்லூர்.

 

 

மன்னர் ஏன் போருக்கு போகும்போது  "ஹைட்ரஜன் சிலிண்டர்'-ஐ முதுகில் கட்டிட்டு போகிறார்?
 எதிரிகள் சுற்றி வளைத்தால், புறமுதுகு காட்டி ஓடாமல் அப்படியே ஆகாயத்தில் பறந்து தப்பிக்கத்தான்!

- சம்பத்குமாரி,
பொன்மலை.

 

 

ஆசிரியர்: உங்கப்பா.. என்ன வேலை செய்கிறார்?
மாணவர்: எங்கம்மா சொல்ற எல்லா வேலையும் செய்றார் ஸார்!

-டி.மோகன்தாஸ்,
நாகர்கோவில்.

 

அம்மா :  சம்பள கவரை டி.வி. மீது வைக்கிறீயே..? ஏன்!
மகன்:  சீரியல் பார்த்துகிட்டு இருக்கும்போது, தொந்தரவு செய்தால் என் மனைவிக்கு கோபம் வரும்!

- அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT