தினமணி கதிர்

முடிவல்ல  தொடக்கமே..!

சக்ரவர்த்தி

பத்தாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெறுவது ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிக முக்கிய கட்டம்தான். தேர்ச்சி அடையாதவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போனவர்கள் தவறான முடிவுக்குச் சென்றுவிடுகின்றனர். ஆனால், மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற ஒருவர், பிற்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார்.

குஜராத்தில் பருச் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் துஷார் டி சுமேரா, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தேர்வு பெற எவ்வளவு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமோ அதை மட்டுமே எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்களையும், கணக்கில் 36 மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ""இவ்வளவு குறைந்த மதிப்பெண்கள் பெற்று மேற்கொண்டு என்ன படித்துக் கிழிக்கப்போகிறாய்'' என்று பலரும் கேலியும் கிண்டலும் செய்தனர். இதனால் அவர் துவண்டுவிடவில்லை.

""பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளேன் .

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன். தொடர்ந்து உழைப்பேன். அதிக மதிப்பெண்கள் பெறுவேன்'' என்று துஷார் தீர்மானித்தார்.

பின்னர், அடுத்தடுத்தத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள்தான்! பட்டப் படிப்பு படித்து ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் ஐஏஎஸ் தேர்வுக்காக தன்னைத் தயார் செய்து தேர்ச்சி பெற்றார். மாவட்ட ஆட்சியராகவும் தேர்வு பெற்று பொறுப்பில் உள்ளார்.

""பத்தாம் வகுப்பில் பெற்றிருந்த மிகக் குறைந்த மதிப்பெண்கள் எனக்கு எந்த வகையிலும் தடைக் கற்களாய் மாறவில்லை. அதையே நினைத்துத் தளர்ந்து போகாமல், மீண்டும் கவனத்துடன் படித்து அடுத்தடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுதான் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதற்காகத்தான் நான் பெற்ற மிகக் குறைந்த மதிப்பெண்களை சமூக தளங்களில் பரப்பினேன். பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒரு முடிவல்ல! ஒரு தொடக்கமே என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டில் சொன்ன வேலை வாங்கித் தராதவரை தாக்கிய 4 போ் மீது வழக்கு

அனைத்து உயிா்களுக்கான தேவையையும் நிறைவு செய்யும் சேவையே அரசியல் -சீமான்

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு

தேர்தல் சுவாரசியம்: நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு சால்வை அணிவித்த இந்தியா கூட்டணி வேட்பாளா்!

தோ்தல் பணி அலுவலா்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் -தோ்தல் பாா்வையாளா்

SCROLL FOR NEXT