""லஞ்சம் கொடுக்கிற உங்க கை ஏன் நடுங்குது?''
""என் வாழ்க்கையிலேயே முதன் முதலாக லஞ்சம் தர்றேன் சார்!''
-கு.அருணாசலம்,
தென்காசி.
அரசர்: ""நம்முடைய அலங்கார புது தேரை ஏன் வழிமறிக்கிறார்கள்?''
மந்திரி: "" சாலை வரி கட்டலையாம்''
- எஸ்.மோகன்,
கோவில்பட்டி.
""பாட்டி.. அப்பா கலர் டி.வி. வாங்கப் போறாரு..!''
""சாயம் போகாததா பாத்து வாங்கச் சொல்லுங்க..!
-எஸ்.சுஜிதா,
மதுரை.
""ஏம்பா.. உன் மனைவி பத்தாயிரத்துக்கு புடவை எடுத்தான்னு வருத்தமாக இருந்த இப்ப சிரிக்கிற?''
""அந்தப் புடவையை எடுத்துக்கிட்டு என் மனைவி, உன் மனைவிக்கிட்ட காட்ட போயிருக்காங்க!
- க.பன்னீர்செல்வம்,
மயிலாடுதுறை.
""எங்கப்பாகிட்ட ரொம்ப நாழியா என்னதான் பேசுவீங்க?''
""புதுப் புது சமையல் சொன்னாரு கமலா''
-பி.கவிதா,
சிதம்பரம்.
""வீடுதான் பெரிசு சுருட்டுவதற்கு ஒண்ணும் இல்லை ஏட்டய்யா..?''
""ஏன்? அத்தனை பெரிய வீட்டுல படுப்பதற்கு பாய் கூடவா இல்லை''
-எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.