தினமணி கதிர்

பேல்பூரி

தினமணி

கண்டது

(தருமபுரி பேருந்துநிலையத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு காரில்)

செல்லாத காசிலும் செம்பு இருக்கும்.

இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.

(சென்னை- புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பாலாற்று பாலம் அருகில் தேநீர் கடையின் பெயர்)

பால் 6 டீ

ஜெ. திருவேங்கடம்
சென்னை-99.

(பாபநாசம் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

கோடு கிழி

மு.மதனகோபால், ஓசூர்.

கேட்டது

( பாளையங்கோட்டைமார்க்கெட்டில் ஒரு கடைக்காரரும் வாடிக்கையாளரும் )


""சார்! ஆப்பிள் வாங்கிட்டு போங்க. டெய்லி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால்
டாக்டரைப் பார்க்க வேண்டியஅவசியமே இருக்காது''
"" நானே ஒரு டாக்டர்தான்''

க.சரவணகுமார்,
ருநெல்வேலி-11


(கடலூரில் உள்ள ஓர் இருசக்கர வாகனவிற்பனை நிலையத்தின் வாசலில்)

""என்ன மாப்ள லோன் வண்டி வாங்க வந்துட்டு வெளியே வந்து சோகமா நிக்கிற?''
""ஆதார் கார்டை கொடுத்த உடனே நெட்ல போட்டு பாத்துட்டு இந்த கார்டுக்கு மகளிர் சுயஉதவிக் குழு கடன் வாங்கி இருக்காங்க... அதனால லோன் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க''
""சபாஷ்டா மாப்ள... என் தங்கச்சி ரொம்பவிவரம்''
""டேய் வேணாண்டா... மரியாதையா ஓடிடு... கடுப்பேத்தாத''


கவிதா பாலாஜி,
சிதம்பரம் - 2

யோசிக்கிறாங்கப்பா!

நாம் பொருள்களை நேசிக்கிறோம்!
மனிதர்களைப் பயன்படுத்துகிறோம்!
எப்போதுதான் மனிதர்களை நேசித்து
பொருள்களைப் பயன்படுத்தப் போகிறோமோ?

துரை.ஏ.இரமணன்,
துறையூர்.

மைக்ரோ கதை

வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான் கண்ணன். சமையல் அறையில் வேலையை முடித்துவிட்டு, வெளியே வந்த மனைவி கமலா, அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
""ஏங்க இன்னைக்கு டிவியில ஒரு செய்தி சொன்னாங்களே... பார்த்தீங்களா?'' என்றாள்.
""இப்பத்தானே வர்றேன். என்ன செய்தி?'' என்று கேட்டான்.
""சாப்பாடு சரியில்லைன்னு சொன்ன கணவனை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற மனைவின்னு டிவியில் செய்தி சொன்னாங்க. அடுத்துப் போடும்போது பாருங்க. சரி... கை, காலை கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம்'' என்றாள்.
மனைவி சொன்ன செய்தி, அதை அவள் மகிழ்ச்சியாக சொன்னவிதம், கண்ணனை யோசிக்க வைத்தது. அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து வந்த கமலம், ""ஏங்க சாப்பிட வரலையா?'' என்று கேட்டாள்.
""நான் இன்னைக்கு விரதம்'' என்றான் கண்ணன்.
""என்ன திடீருன்னு? எப்ப நேந்துக்கிட்டீங்க?''
""ஜஸ்ட் இப்போ தான்'' என்றான்கண்ணன்.

ச.அரசமதி,
தேனி.

எஸ்.எம்.எஸ்.


வார்த்தைகள் சாவிகள் போன்றவை;
நீங்கள் அவற்றை சரியாகத் தேர்வு செய்தால்,
அவற்றால் எந்த இதயத்தையும் திறக்க முடியும்,
எந்த வாயையும் மூட முடியும்.

ஜி. மஞ்சரி
கிருஷ்ணகிரி- 1

அப்படீங்களா!


மனிதர்களை விட நாய்களுக்கு மோப்ப சக்தி 50 மடங்கு அதிகம். வாசனைகளின் தன்மையைப் பிரித்தறியும் திறனும் 40 மடங்கு அதிகம். இதை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களின் மூச்சுக்காற்றை உள்வாங்கி, அதிலிருந்து அவர்களுக்கு உள்ள நோயைக் கண்டறியும் "ஸ்நிஃப்போன்' என்ற கருவி ஐந்தாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டுவிட்டது. தற்போது மிகவும் நவீனப்படுத்தப்பட்டு இந்தக் கருவி உருவாகியுள்ளது.

இந்தக் கருவியின் செயல்திறனை அறிய லாத்வியா நாட்டின் ரிகா நகரில் உள்ள லாத்வியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்குழு முனைந்தது. குடல்புற்றுநோய் வந்த 48 நோயாளிகள், புற்றுநோய் அறிகுறிகள் உள்ள 150 நோயாளிகள் உள்ளிட்ட 300 நபர்களை இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்கள். இந்தக் கருவியைக் கொண்டு சோதனை செய்து பார்த்ததில், 86 சதவீதம் முதல் 93 சதவீதம் வரை அதன் முடிவுகள் துல்லியத்தன்மை உள்ளவையாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மனிதனின் மூச்சுக்காற்றை முகர்ந்து பார்க்கும் இந்தக் கருவி செல்பேசியைப் போன்ற வடிவமுடையது. மூச்சுக்காற்றின் வாசனையை மிகத்துல்லியமாக கண்டறியும்விதமாக செயற்கைத் தொழில்நுட்பத்தின் துணையுடன் தயாரிக்கப்பட்ட சென்சார்கள் இந்தக் கருவியில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சென்சார்களின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் மூச்சுக்காற்றின் வாசனைக்கேற்ப மனிதனின் உடலில் எந்த நோய், எந்த அளவுக்கு உள்ளது என்பதை இந்தக் கருவி தெரிவித்துவிடும்.

ப்ளூடூத் மூலமாக இந்தக் கருவியைச் செல்பேசியுடன் இணைக்க ஒரு செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி கண்டறிந்தவற்றை பிறருடைய செல்பேசிக்கு அனுப்பி வைக்க முடியும்.

புற்றுநோய்க்கட்டிகள், பார்கின்சன் டிமென்ஷியா, மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் என பல நோய்களைக் கண்டறியும் இந்தக் கருவி பேட்டரியால் இயங்கக் கூடியது.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT