தினமணி கதிர்

சிரி... சிரி...

14th Aug 2022 06:00 AM

ADVERTISEMENT

 

""மருந்து பாட்டிலை ஏன் தடவிகிட்டு இருக்கே!''
""டாக்டர்தான் தலைவலிச்சா இதை தடவச் சொன்னாரு!''

-டி.மோகனதாஸ்,
நாகர்கோவில்.

 

ADVERTISEMENT

""என்னய்யா ஓட்டல் இது.. நேத்து வச்ச குழம்பை சூடு பண்ணி ஊத்துன மாதிரி இருக்கு!''
""நாங்கதான் வீட்டுமுறை சமையல்னு போட்டு வச்சிருக்கோமே .. ஸார்!''

- பா.சக்திவேல்,  
கோயம்புத்தூர்.

 

""அம்மா தாயே தர்மம் பண்ணுங்க...''
""பணம் எடுத்துட்டு வரலைப்பா...''
""பரவாயில்லைம்மா...ஜி பே உங்களிடம் இருக்கா?''

-சரஸ்வதி செந்தில்,
பொறையார்.

 

""பியூட்டி பார்லர் உள்ளேர்ந்து வெளியே வந்த பெண்ணை பார்த்து பல்லை காண்பித்தது தப்பா போச்சு!''
""ஏன்?''
""கடைசியிலேயே பார்த்தா அவ என் மனைவி''

-தீபிகா சாரதி,
சென்னை.

 

""மாப்ளே.. ஏன் சோகமா இருக்கே!''
""ஜானகி என்ற பேரில் மெசேஜ் வந்துட்டு இருந்துச்சே..  முழு பெயரைக் கேட்டா ஷாக் ஆகிட்டேன்''
""ஏன் அப்படி''
""ஜானகிராமனாம்!''

- டிங்கர் ஆர்.குமார்,  
சிதம்பரம்.


""என்ன சார்! மொட்டையா புகார் கொடுக்கிறீங்க!''
""அநியாயமா இருக்கே.. என் தலையில முடி வளர்ற வரைக்கும் கொடுக்க முடியாதா?''

-ப.சரவணன்,
ஸ்ரீரங்கம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT