தினமணி கதிர்

சிரி...சிரி...(07/08/2022)

7th Aug 2022 05:39 PM

ADVERTISEMENT

* "டாக்டர்.. மார்பு படபடங்குது. அவசரமாய் பாருங்களேன்''
 " முதலில் பீஸ் கட்டிட்டு வாங்க..''
 "என்ன டாக்டர் இப்டி சொல்றீங்க...!''
 பீஸை கேட்டா இன்னும் படபடக்கும்.
 அதனால்தான்''
 -வி.ந.ஸ்ரீதரன், சிறுசேரி.
 
*  "பலாப்பழம் ஸ்வீட்டா? மாம்பழம் ஸ்வீட்டா?''
 "பலாப்பழம்தான் ஸ்வீட்!''
 "தப்பு. ரெண்டுமே ஸ்வீட் இல்ல.. ஃப்ரூட்ஸ்!''
 -இரா.அருண்குமார், புதுச்சேரி.
 
*  ""வாப்பா! புதுசா கார் வாங்கிருக்கே போல..! என்ன வியாபாரம் பண்றே..!''
 ""மாஸ்க் விக்கறேன்...''
 -ப.சரவணன், ஸ்ரீரங்கம்.
 
 * ""டாக்டரை கல்யாணம் பண்ணது நல்லாதா போச்சு''
 "எப்படி''
 "ஊட்டச்சத்து மிக்க சாப்பாடா செஞ்சி
 அசத்துறாருடி''
 -எம்.செந்தில்குமார், சென்னை.
 
* "கரண்ட் கம்பியில மூன்று எறும்புகள் போனது. அதுல இரண்டு ஷாக் அடித்து செத்துப் போச்சு. ஒரு எறும்பு மட்டும் சாகலை! ஏன்?''
 " ஏன்னா...அது கட்டை எறும்பு...!''
 -அப்துல்ஹாதி, கடையநல்லூர்.
 
 * "என்னையா இந்த தோசைக்கு 40 ரூபா
 இன்னொரு தோசைக்கு 50 ரூபா பில் போட்டுருக்க?''
 ""முதல்ல சாப்பிட்ட தோசை பழைய
 சிலிண்டர்ல சுட்டது சார். இன்னொரு தோசைக்கு
 கேஸ் சிலிண்டர் விலை ஏறின பிறகு சுட்டதாச்சே.. அதான் விலை ஏற்றம்!''
 - ச. ஸ்ரீ ஐஸ்வர்யா ராணி, சிதம்பரம்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT