தினமணி கதிர்

பேல் பூரி

17th Apr 2022 06:00 AM

ADVERTISEMENT

கேட்டது
(திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இரண்டு  கல்லூரி மாணவர்கள்)  
"காதுல ஏதோ புகுந்திடுச்சிடா  மாப்ளே. கத்துது''
"காதுல என்ன கழுதையா  புகுந்திருக்கும் கத்தறதுக்கு ஏதாவது  பூச்சி புகுந்திகுக்கும். தண்ணிய  ஊத்துடா வந்திடும்''
 

(மேலகிருஷ்ணன்புதூர் பேருந்தில் பயணியும் நடத்துநரும்)
 "அய்யா, இந்த பஸ் ஓசியா.. காசா?''
"இரண்டும்தான்..''  
" தெளிவா சொல்லுங்கய்யா"
"ஆம்பளைங்களுக்கு காசு,  பொம்பளைங்களுக்கு ஓசி''
 

(திருச்சி  தில்லைநகரில் ஒரு மருந்து கடையில் இரு நண்பர்கள்)
 "வழக்கமாக  ஆயிரம் ரூபாய்க்கு தானே,  மருந்து வாங்குவே? 
 இப்ப,  ஐயாயிரத்துக்கு  வாங்குறீயே?''
 "ஒண்ணாம்தேதி  முதல் மருந்து  விலை தாறு மாறாக  ஏறப்போவுதாமே''
 "எவனோ, ஒருத்தன்  உன்னை  முட்டாள் ஆக்கி இருக்கான்  நீயும் நம்பிட்டீயே?''
 


கண்டது
(தேனி - முன்னாள்  பத்திரப்பதிவு  அலுவலகத்தின் அருகில் உள்ள ஒரு மிட்டாய் கடையின் பெயர்)
 80 கிட்ஸ்  ஸ்நாக்ஸ்

 
(சென்னையில்  மோட்டார்பைக் 
பின்புறம்  எழுதியிருந்த வாசகம்)
 இடிப்பது நீ..
தடுப்பது நான்.. 

ADVERTISEMENT

(செங்கல்பட்டு  மாவட்டம்,  மாம்பாக்கம் அருகில்  உள்ள ஒரு ஊரின் பெயர்)
தாழம்பூர்
 


யேஹாசிக்கிறாங்கப்பா!
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
 வெயில் அடிச்சா.. திரும்ப அடிக்க முடியாது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT