தினமணி கதிர்

திரைக்கதிர்

19th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT

 

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக உள்ள நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், காமெடி ரொமான்ஸ் படமாகத் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். 

அனிருத் இசையில் உருவான ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டிராக், கடந்த பிப்ரவரி 14 - ஆம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அன்பான இயக்குநரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18 - ஆம் தேதி "டூ.. டூ.. டூ' என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். 

---------------------------------------------

ADVERTISEMENT

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், 2016-ஆம் ஆண்டு வெளியான "கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான கார்த்தியின் "சுல்தான்' படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது ஹிந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தனது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் கூட இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று தென்னிந்திய நடிகைகளை ஓரங்கட்டி சாதனை படைத்தார்.

இந்நிலையில் தனது புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் "லைக்'குகளை அள்ளி வீசி வருகின்றனர். 

---------------------------------------------


தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோவாக இருப்பவர் நடிகர் நகுல். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான "பாய்ஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு சுனைனாவுடன் இணைந்து "காதலில் விழுந்தேன்' படத்தில் நடித்தார். அது  நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நகுல், "வாஸ்கோடகாமா' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தை 5656 புரொடக்ஷன் சார்பில் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையை வைத்து இப்படம் வித்தியாசமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரை நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் வின்னர் ஆரி, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அதுல்யா ரவி, சுபிக்ஷô, இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட சுமார் 100 திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

---------------------------------------------

பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். 

தமிழில் "தோனி' படத்தில் அறிமுகம் ஆனார். "கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான "ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்திலும் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. தமிழில் பரிச்சயமான நடிகை இல்லை என்றாலும் ஹிந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது என்ற செய்தி கடந்த 2019 -ஆம்  ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவரது கணவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நடிகர் தான். அதனை ராதிகா ஆப்தேவே பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர், ""எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டால் சுலபமாக விசா கிடைத்துவிடும் என்று தான் திருமணம் செய்து கொண்டேன்.

நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. எனக்குத் திருமணம் ஆனதை மறைக்க வேண்டும் என்ற  எண்ணம் இல்லை. அதை வெளியில் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை அவ்வளவு தான்'' என்று கூறி இருந்தார்.

Tags : kadhir Thiraikadhir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT