தினமணி கதிர்

பேல்பூரி

19th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT


கண்டது

(மதுரை கே.புதூரில் உள்ளதமிழ்நாடு வனத்துறைஅலுவலகச் சுவரில்)

 

வீட்டுக்கு வீடு வேம்பு
சோப்பா இருக்கு...
ஷாம்பா இருக்கு...
பேஸ்ட்டா இருக்கு...
அவ்வளவு ஏன்
கொசுவர்த்தியா கூட இருக்கு...
ஆனா மரமாத் தான் இல்ல!

ந. பிரபுராஜா,
மதுரை -2.

ADVERTISEMENT

 

(திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர் )

குதிரைப் பெட்டி.

- ச.ஜான்ரவி ,
கோவில்பட்டி.

 

(கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஓர் இனிப்பகத்தின் பெயர்)

அனுதினம் ஸ்வீட்ஸ்

பி. கோபி, கிருஷ்ணகிரி.

 

கேட்டது


( செங்கல்பட்டு அழகேசன் நகர் பேப்பர் கடை அருகில் இருவர் )

""காலில் என்ன காயம்?''
""செருப்பு கடிச்சிடுச்சு''
""பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?''

க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.

(திருச்சி -மார்க்கெட்டில் காய்கறிக் கடைக்காரரும் காய் வாங்க வந்த பெண்ணும்)

""அவரைக்காய் அரைக்கிலோ இருபது ரூபாய்.
நீ பத்து ரூபாய் தான் தந்திருக்கம்மா''
""என்கிட்ட இருபது ரூபாய் தான் இருக்கு. பத்து ரூபாய் பஸ்ஸூக்கு வேணும். பத்து ரூபாய் காய்க்கு எடுத்துக்கோங்க. மீதி நாளைக்குத் தர்றேன்''
""பஸ்ùஸல்லாம் இப்ப லேடீஸூக்கு இலவசம் தான்! கடன் சொல்லாமக் காசைக் குடும்மா''

-பா.சிவானந்தம்,
திருச்சி.


யோசிக்கிறாங்கப்பா!


"கதவைத் திறந்தால் காற்று வரும்'
உண்மைதான்...
அக்கதவுகளை உருவாக்க
மரங்களை வெட்டாதவரை.

மு.கௌந்தி,
சென்னை-119.

மைக்ரோ கதை

கிராமத்து ஆசாமி ஒருவர், மகனைப் பார்க்க நகரத்துக்கு வந்தார். ஒருநாள் அவரது பேரன், தாத்தாவை ஒரு பெரிய வணிக வளாகத்துக்கு அழைத்துச் சென்றான்.

ஒவ்வொரு தளத்திலும், வகைவகையாய் வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்து பிரமித்துப் போன தாத்தாவின் முகத்தில் கவலை தென்பட்டது.

""ஆமாம் தாத்தா... நீங்க ஏன் கவலையாவே இருக்கீங்க? இதெல்லாம் கிராமத்துல இல்லைன்னுதானே?'' என்றான் பேரன்.

அதற்கு தாத்தா, ""அட நீ வேற பேராண்டி... இங்கு, மனிதனுக்குத் தேவையில்லாத பொருட்கள்தான் அதிகம் இருக்கு. அதுதான் எனக்குக் கவலையா இருக்கு'' என்றார் சிரித்தபடி.

பூபதி பெரியசாமி,
புதுச்சேரி-9

எஸ்.எம்.எஸ்.


வாழவே முடியாது என்று சிலர் நினைப்பது போல,
வாழ்க்கை கடினமானது அல்ல.
வாழ்வு இன்பமயமானது என்று சிலர் நினைப்பது போல,
அவ்வளவு எளிதானதுமல்ல.

மு.தாஜுதீன்,
தஞ்சாவூர் -5.

அப்படீங்களா!

நிறையப் பூட்டுகள் உள்ள வீட்டிலோ, அலுவலகத்திலோ, பணியிடங்களிலோ எல்லாரும் அவ்வப்போது எரிச்சலடையும் ஒரு விஷயம், எந்தப் பூட்டுக்கு எந்தச் சாவி என்பதைக் கண்டுபிடிப்பதுதான். மாஸ்டர் லாக் என்ற புதுவிதமான பூட்டு, சாவியில்லாத பூட்டு.

விரல்ரேகைப் பதிவு தான் அதற்கு சாவி. பதிவு செய்யப்பட்ட விரல் ரேகையைக் காட்டி அந்தப் பூட்டைத் திறக்க முடியும். ஒரு பூட்டுக்கு பத்துப் பேரின் விரல் ரேகைகளைப் பதிவு செய்து கொள்ள முடியும் என்பதால் ஒரு குடும்பத்தில் உள்ள பத்துப் பேர் வரை அந்தப் பூட்டைப் பயன்படுத்த முடியும்.

இந்தப் பூட்டில் விரல் ரேகை பதிவு மட்டுமல்லாமல், கீ பேட் வசதியும் உள்ளது. ஒரு வேளை விரல் ரேகைப் பதிவினால் பூட்டைத் திறக்க முடியாவிட்டால், இந்த கீ பேடைப் பயன்படுத்தி திறந்து கொள்ளலாம்.

எளிதில் உடைக்கவோ, அறுக்கவோ முடியாதபடி உள்ள இந்தப் பூட்டு கடினமானது. இதில் உள்ள பேட்டரியை ஆண்டுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பூட்டின் விலை கொஞ்சம் அதிகம். 129 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9,500).

என்.ஜே.,
சென்னை -58

Tags : kadhir Bhelpuri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT