தினமணி கதிர்

பேல்பூரி

DIN

கண்டது


(ஈரோடு ஆர்கேவி ரோட்டில் முதல் தளத்தில் உள்ள ஒருதுணிக் கடையில்)

படி ஏறினால் பணம் மிச்சம்

- க. ரவீந்திரன், ஈரோடு- 2.

(பொன்னமராவதி காதணி விழா ஒன்றில் கண்ட வாசகம்)

செவிக்கு பொன்சூட்டும் விழா

அ.கருப்பையா,
பொன்னமராவதி.

(சென்னை மண்ணடி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

என் மனங்கொண்டான்வண்டிக்காரர் அப்பா மெஸ்

கே.ஆர். உதயகுமார்,
சென்னை -1.

(திருநெல்வேலி மருத்துவமனை ஒன்றில் கண்ட வாசகம்)
நோயின்றி வாழ வாழ்த்துகிறோம்...
நோய் வந்தால் காப்பாற்றக் காத்திருக்கிறோம்.

ஆ. மாடக்கண்ணு,
பாப்பான்குளம்.

கேட்டது

(பட்டுக்கோட்டை தேநீர்க்கடை ஒன்றில்இருவர்)

""இவர், நம்ம கடையில எல்லாம் டீ வாங்கமாட்டார்''
""யார் சொன்னது? நீங்கள்தான் என்ன மாதிரி ஏழைக்கெல்லாம் டீ கொடுக்கிறது இல்ல... சரி, பரவாயில்லை... நல்ல ஸ்ட்ராங்கா, சூடா, சீனி கம்மியா கடனா ஒரு ஆறு டீ போடுங்க''

-ஜி. அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.

(தஞ்சை காவேரி நகரில் நண்பர்கள் இருவர்)

""என்னடா...சுகர் 400 - க்கும் மேலேயாமே! ?''
""அது மட்டுமா... கிட்னி ஒண்ணு அவுட்,
நுரையீரல் ஒருபக்கம் டேமேஜ், ஹார்ட் கொஞ்சம் வீக்...போதுமா... போய் நிம்மதியா தூங்கு! பைசா செலவில்லாமே, அடுத்தவன் துன்பத்தை கேட்டு பாடியை கூலா மெயின்டெய்ன் பண்ற ஒரே ஆளு நீதான்டா!''

தே.ராஜாசிங் ஜெயக்குமார்
தஞ்சாவூர்- 5

யோசிக்கிறாங்கப்பா!

நல்லதுன்னு நினைச்சு நாம் செய்றது,
சிலருக்குக் கெட்டதாகத் தெரியும்.
கெட்டதுன்னு நினைச்சு நாம் செய்யாமல் விடுறது,
சிலருக்கு நல்லதாத் தெரியும்.
எனவே, சிலருக்காக வாழ்க்கையைச் சிக்கலாக்கக் கூடாது.


சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.


மைக்ரோ கதை

கண்ணன் என்ற ஒரு துறவி இருந்தார். அவருக்கு பல சீடர்கள் இருந்தார்கள். அவருக்கு வயதான போதும், தினமும்அத்துறவி தோட்ட வேலையை விடாமல் தொடர்ந்து செய்து வந்தார். அவரது தள்ளாமையை கண்ட சீடர்கள், அவரை ஓய்வெடுக்க பலமுறைகூறியும், அவர் அதை கேட்கவில்லை.

மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றை வைத்து அவர் கடினமாக வேலை செய்வதை சீடர்கள் பார்த்து மிகவும் வருந்தினர். எனவே அவருக்கு தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து விட்டனர்.

துறவி, தோட்டத்திற்குப் போய் பார்த்தபோது மண்வெட்டியும் கடப்பாரையும் இல்லாமல்மிகவும் வருந்தினார். எனவே அன்று இரவு சாப்பிடாமல் இருந்தார். சீடர்கள் எவ்வளவு சொல்லியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார்.

மறுநாள் அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு மண்வெட்டியும் கடப்பாரையும் இருப்பதைக் கண்டு உடனே வேலையைச் செய்து விட்டு மகிழ்ச்சியுடன் வந்து சாப்பிட்டார்.

இதனைக் கண்ட சீடர்கள், ""அவரிடம்எங்களை மன்னித்து விடுங்கள் குருவே. நாங்கள்தான் மண்வெட்டியையும், கடப்பாரையும் மறைத்து வைத்தோம். நீங்கள் வேலை செய்வதைப் பார்க்க எங்களால் முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. எனவே தான் மறைத்து வைத்தோம்'' என்றனர். அதற்கு குரு, ""உழைப்பவர்களுக்குத்தான் உண்ணும் உரிமை உண்டு.

நேற்று நான் வேலை செய்யவில்லை.

அதனால் உண்ணவில்லை'' என்று கூறினார்.

இதனைக் கேட்ட சீடர்கள் மிகவும் வியந்துநின்றார்கள்.

செளமியா சுப்ரமணியன்,
சென்னை- 117.


எஸ்.எம்.எஸ்.

பொய் சொன்னால் எளிதாக நம்புகிறார்கள்.
ஆனால்... உண்மைக்கு புள்ளி விவரம்தேவைப்படுகிறது.

சுந்தரி காந்தி,
சென்னை - 56.



அப்படீங்களா!

ஈக்கள் இனிப்பு பண்டங்களில் மொய்த்துக் கிடப்பதும், கசப்புச்சுவையுள்ள உணவுகளில் இருந்து தூர விலகி இருப்பதும் ஏன் என்ற ஆராய்ச்சியில் யேல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக ஈக்கள் அதிகமுள்ள பகுதியில் 3 வகையான உணவுப் பொருள்களை வைத்தனர். இனிப்பு அதிகமுள்ள பொருள்களையும், கசப்புச் சுவையுள்ளவற்றை மேற்பூச்சாகப் பூசிய இனிப்புப் பொருள்களையும், குறைந்த கலோரியுள்ள குறைந்த இனிப்புச் சுவையுள்ள கசப்பில்லாத பொருள்களையும் வைத்தனர்.

ஈக்களுக்கு பசி எந்த அளவுக்கு உள்ளதோ அதற்கேற்ற உணவுகளையே அவை தேர்ந்தெடுத்தன. அதிகப் பசியிருக்கும் ஈக்கள் குறைந்த சுவையும், அதிக கலோரியும் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்தன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

உணவு எந்த அளவுக்கு உடலுக்குத் தேவை என்பது குறித்த உடலின் உணர்வுகள் ஈக்களின் மூளையில் உள்ள இறக்கை வடிவிலான பகுதிக்கு வந்து சேர்வதாகவும், அந்த தகவலின் அடிப்படையிலேயே ஈக்கள் தாங்கள் சாப்பிடும் உணவைத் தேர்ந்தெடுப்பதாகவும் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

உடலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு உணர்வுகள் கடத்தப்படுவதற்கு ஈக்களின் மூளையில் சுரக்கின்ற ஒருவிதமான புரதப் பொருள்களே உதவுகின்றன என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், மனித மூளையிலும் இத்தகைய புரதப் பொருள் சுரப்புகள் உள்ளதாகக் கூறுகின்றனர்.
"பசி ருசி அறியாது' என்பார்கள். "பசி ருசி அறியும்; எதைச் சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லும்' என்பதே இந்த கண்டுபிடிப்பில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் உண்மை.

என்.ஜே.,
சென்னை-58.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT