தினமணி கதிர்

ஆண்களுக்கான உடற்கட்டமைப்பு... மிஸ்டர் ஒலிம்பியா!

DIN

ஸ்பெயின் நாட்டிலுள்ள லாஸ் ரோசாஸ் (மாட்ரிட்) எனுமிடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதிக் கூட்டமைப்பு (இண்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் பாடி பில்டிங் அண்ட் ஃபிட்னெஸ் - ஐஎஃப்பிபி)  அமைப்பு மிஸ்டர் ஒலிம்பியா, மிஸ் ஒலிம்பியா, வீல்சேர் ஒலிம்பியா, ஆரோக்கிய ஒலிம்பியா, பெண்களுக்கான உடலமைப்பு ஒலிம்பியா, பிகினி ஒலிம்பியா, பிகர் ஒலிம்பியா, செம்மையான உடலமைப்பு ஒலிம்பியா என்று பல்வேறு உடற்கட்டமைப்புப் போட்டிகளை உலகளாவிய நிலையில் நடத்தி வெற்றியாளர்களை அறிவித்து வருகிறது. 
இந்த அமைப்பு, 1965 - ஆம் ஆண்டிலிருந்து மிஸ்டர் ஒலிம்பியா எனப்படும் ஆண்களுக்கான உடற்கட்டமைப்புப் போட்டிகளை நடத்தி, அதில் வெற்றியடைபவர்களுக்குப் பரிசுத்தொகையுடன் மிஸ்டர் ஒலிம்பியா எனும் பட்டத்தினையும்  வழங்கி வருகிறது. 
1965 - ஆம் ஆண்டில் முதன் முதலாக  ஆண்களுக்கான உடற்கட்டமைப்புப் போட்டியில் அமெரிக்காவின் லாரி ஸ்காட் என்பவர் மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை வென்றார். 1966 -ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் இவரே இரண்டாவது முறையாக மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை வென்றார். 
1967, 1968 மற்றும் 1969 - ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் கியூபாவின் குவண்டநாமோ நகரில் பிறந்த செர்ஜியோ ஒலிவா என்பவர் தொடந்து மூன்று முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை வென்றார். 1970 முதல் 1973 -ஆம் ஆண்டு வரையிலான போட்டிகளில் ஆஸ்திரியா நாட்டின் தல் எனும் கிராமத்தில் பிறந்த அர்னால்டு ஸ்வார்ஸ்நேக்கர் என்பவர்  மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை வென்றார்.
1984 முதல் 1991 வரையில் நடைபெற்ற எட்டு ஆண்டுகளுக்கான போட்டிகளில் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்திலுள்ள பேர்பர்ன் நகரைச் சேர்ந்த லீ ஹனி என்பவர் தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள் மிஸ்டர் ஒலிம்பியா 
பட்டத்தினை வென்றார். 
அதன் பிறகு, 1992 முதல் 1997 வரையில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து நாட்டில் சோலிகுல் நகரைச் சேர்ந்த டோரியன் ஏட்ஸ் என்பவர் ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்பட்டத்தை வென்றார். 
1998 - ஆம் ஆண்டிலிருந்து 2005- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள மோன்ரோ நகரில் பிறந்த ரோனி கோல்மன் என்பவர் தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகள் இப்பட்டத்தினை வென்றார்.  
2011 முதல் 2017 வரையில் நடைபெற்ற போட்டிகளில் அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகரைச் சேர்ந்த பில் ஹீத் என்பவர் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் இப்பட்டத்தினை வென்றார். 
2019 - ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள நாஸ்வில்லி எனும் நகரில் பிறந்த பிராண்டன் காரி என்பவர் பட்டத்தை வென்றார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் எகிப்து நாட்டிலுள்ள காபர் எல்சேக், அல்-சீபியா எனுமிடத்தில் பிறந்த மம்தூ முகமது ஹசன் எல்சுபாய் என்பவர் பட்டம் வென்றார். 
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்திலுள்ள பேர்பர்ன் நகரைச் சேர்ந்த லீ ஹனி என்பவர் ஒட்டு மொத்தப் பிரிவில் 8 முறை வென்று இருக்கிறார். இதே போன்று, அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள மோன்ரோ நகரில் பிறந்த ரோனி கோல்மன் என்பவரும் ஒட்டு மொத்தப் பிரிவில் 8 முறை வென்று இருக்கிறார். இதனால் இவர்களிலிருவரும் முதலிடத்தில் இருக்கின்றனர். 
ஆஸ்திரியா நாட்டின் தல் எனும் கிராமத்தில் பிறந்த அர்னால்டு ஸ்வார்ஸ்நேக்கர் என்பவர் ஒட்டுமொத்தப் பிரிவில் 7 முறையும், மிகு எடைப் பிரிவில் இரு முறை என்று இப்பட்டத்தினை வென்று இரண்டாமிடத்தில் இருக்கிறார். இதே போன்று, அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகரைச் சேர்ந்த பில் ஹீத் என்பவர் ஒட்டு மொத்தப் பிரிவில் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் இப்பட்டத்தினை வென்று இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் சோலிகுல் நகரைச் சேர்ந்த டோரியன் ஏட்ஸ் என்பவர் ஒட்டு மொத்தப் பிரிவில் ஆறு ஆண்டுகள் இப்பட்டத்தினை வென்று மூன்றாமிடத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்திலுள்ள ஸ்டெர்லிங் நகரில் பிறந்த ஜெய் கட்லர் என்பவர் 4 முறை ஒட்டு மொத்தப் பிரிவில் வென்று நான்காமிடத்தில் இருக்கிறார்.  
2021 ஆம் ஆண்டுக்கான போட்டி வருகிற 7-10-2021 முதல் 10-10-2021 வரை அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓர்லாண்டா நகரில் நடைபெற
விருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT