தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவும் காதும்!

DIN

நான் இரவில் 10 மணிக்குப் படுக்கச் செல்வேன். வீட்டிலுள்ள மற்றவர்கள் இரவு 11 மணி வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்ட பிறகே உறங்கச் செல்வார்கள்.  என் உறக்கம் கெட்டுவிடக் கூடாது என்று சிறிய அளவில்தான் சத்தம் வைத்து நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். ஆனால் அதுவே எனக்குப் பெரும் சத்தமாகவும், அதைக் தாங்க முடியாத வேதனையாகவும் உணர்கிறேன்.  இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்னை வருகிறது. இது எதனால்?
ரவி, காரைக்கால்.

"சப்தா அஸஹிஷ்ணுத்துவம்' என்ற ஒரு சமஸ்கிருத வார்த்தையை  வாக்படர் எனும் முனிவர் ஆயுர்வேத நூலில் பயன்படுத்துகிறார். சிறிய சத்தம் கூட கேட்க முடியாத வேதனையைத் தருகிறது என்று அதற்குப் பொருள் கூறலாம்.  

உண்ணும் உணவின் சத்தான பகுதி சரி வர உடலில் சேராமலிருக்கும்பட்சத்தில் , உடல் வறட்சி, தளர்ச்சி, வாட்டம், சோர்வு மற்றும் நீங்கள் குறிப்பிடும் சப்த வேதனை போன்றவை ஏற்படும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.  

அதனால் காதில்தான் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது என நீங்கள் நினைத்து அதற்கு வைத்தியம் செய்து கொண்டால், உபாதை மாறாது. அடிப்படைப் பிரச்னை வயிற்றில்தான் இதற்கு உள்ளது.

உணவின் முழுச் சத்தையும் பெறுவதற்கு நீங்கள் நல்ல செரிமான சக்தியைப் பெற வேண்டும். அதற்கு எளிதில் செரிக்கக் கூடிய வெதுவெதுப்பான, சிறிது உப்பும், நெய்யும் கலந்த அரிசியும்,  பயற்றம் பருப்பும் கலந்த கஞ்சித் தண்ணீரைக் காலை உணவாக ஏற்பதும், மதிய உணவாக மிளகு, சீரகம் சேர்த்த ரசம் சாதம், நன்கு வெந்த கறிகாய்கள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புளி சேர்த்து அரைத்த துவையல், பொரித்த மணத்தக்காளி விதை, நன்கு கடைந்து  வெண்ணெய் நீக்கிய மோர்,  வேப்பிலைக் கட்டி எனும் நார்த்தங்காய் இலை, மிளகாய் போன்றவை இடித்து உருண்டையாகச் செய்யப்படும் சீரணக் கலவை ஆகியவற்றை உணவாகக் கொள்ள வேண்டும். மாலையில் சுக்கு, ஏலக்காய்த் தட்டி போட்ட தேநீரும்,  இரவில் வெறும் மோர் சாதத்தை நார்த்தங்காய் வற்றலுடனும் சிறிது நாட்கள் சாப்பிட,  பசியின் தன்மை தீவிரமாவதுடன், வயிற்றைச் சுற்றி நிற்கும் மந்தமான சூழலும் மாறிவிடும்.

 மேற்குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்ட நீங்கள் தீவிரமான பசியைக் குறிப்பிட்ட நேரத்தில் பெறுவதால், அதன் பிறகு நீங்கள் விரும்பும் வகையில்  உணவை ஏற்கலாம்.  இதனால் உணவின் சாரமானது,  தேவையான அளவில்  காதினுள் அமைந்துள்ள   நுண்ணிய நரம்புகளுக்கு ஊட்டத்தையும், காதினுள் அமைந்துள்ள சுழி போன்ற பகுதியில்  சேமித்து வைக்கும் நீர்த் திரவத்தின் வருகையும் கூடும். இஞஇஏகஉஅ எனும் சுழியுடன் கூடிய காதின் உறுப்பினுள் சேகரிக்கப்படும் இந்த உணவின் சாரமான   உசஈஞகவஙடஏ திரவம் சரியான அளவில் சேரும் நிலையில், உங்கள் காதுகளுக்கு சிறிய சத்தம், சிறிய சத்தமாகவே கேட்கும்.  பெரிய சத்தம், பெரிய சத்தமாகவே நிச்சயம் கேட்கும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT