தினமணி கதிர்

பேல்பூரி

24th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


கேட்டது


(நயாகரா நீர்வீழ்ச்சியருகே ஒரு தமிழ் குடும்பம்)

""டேய்....சுந்தரம் இந்த நயாகரா நீர்வீழ்ச்சி இருக்கே, இது என்ன ஊர்?''
""எருமை''
""என்னடா, ஊர் பேரைக் கேட்டா திட்டுறே?''
""திட்டலை சித்தப்பா, இந்த ஊரின் பெயர் பஃபல்லோ. இங்கிலீஷில் பஃபல்லோ என்றால் எருமை என்று பொருள்''
""அடக் கடவுளே, ஊருக்கு இப்படியெல்லாமா பெயர் வைப்பாங்க!''
 

-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.

(செங்கல்பட்டு பெட்ரோல்பங்க்கில் இருவர்)

ADVERTISEMENT

""கூடிய சீக்கிரத்தில் பெட்ரோல் விலை 60 ரூபாய் ஆகும்டா''
""என்னடா சொல்ற? நிஜமாவா?''
""ஆமாண்டா... அரை லிட்டர் பெட்ரோல் விலையைச் சொன்னேன்''

க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.


கண்டது


(மதுரை முடக்குச்சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

மெடிசின் உணவகம்

கா.பசும்பொன்,
மதுரை-16.

 

(வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

நடுக்கட்டை

கே.ஆர். உதயகுமார்,
சென்னை - 1.

 

(சென்னை வேளச்சேரியில் ஒரு கடையின் பெயர்)

மொக்க கடை

ம. நவீன்,
கொடுங்கையூர்.

 

யோசிக்கிறாங்கப்பா!

நாம் யாரென்று நிரூபிக்க எத்தனை அடையாள அட்டைகள்!
இருந்தாலும்,
மனிதன் என்பதை நிரூபிக்க அன்பு ஒன்று தான் உள்ளது!

பாலாஜி.
க, சேலம் 2.

 

மைக்ரோ கதை


""வக்கீல் சார்... என்னைய எம் பொண்டாட்டி கிட்ட இருந்து காப்பாத்துங்க சார்... காப்பாத்துங்க''
""ஏம்ப்பா... என்ன நடந்துச்சு''
""அத ஏன் கேக்குறீங்க சார்... கடந்த நாலஞ்சு மாசா மாசம் ஒரு புத்தகத்தை வாங்கிட்டு வந்து என்னய பாடா படுத்துறா''
""புத்தகமா... கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுப்பா''
""சொல்றேன் சார்... மொத மாசம் "30 நாட்களில் கராத்தே கற்றுக் கொள்வது எப்படி'ங்கிற புத்தகத்தை வாங்கிட்டு வந்தா. வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்ப ரணகளமாக்கி கராத்தே கத்துகிட்டா. அப்புறம் அடுத்த மாசம் "30 நாட்களில் வர்மக்கலை கற்றுக்கொள்வது எப்படி'ங்கிற புத்தகத்தை வாங்கிட்டு வந்து முப்பது நாளும் என் ஒடம்புல கதகளி ஆடிட்டா... நானும் வலிக்காதது மாதிரியே தாங்கிட்டேன். மூணாவது மாதம் 30 நாட்களில் தற்காப்பு கலையைக் கற்றுக் கொள்வது எப்படிங்கிற புத்தகம் சார்... முப்பது நாளும் கொரில்லா தாக்குதல் நடத்தி என்ன நிலைகுலைய வச்சிட்டா. நாலாவது மாசம் வாங்கிட்டு வந்த புத்தகம்தான் என்ன வெலவெலத்துப் போக வச்சிடுச்சி. இதுக்கு மேலே என்னால தாங்க முடியாது சார்... எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்துடுங்க வக்கீல் சார்''
""நாலாவது மாசம் என்ன புத்தகம் வாங்கிட்டு வந்தாங்க?''
""30 நாட்களும் முப்பது விதமான உப்புமா செய்வதெப்படிங்கிற புத்தகம் சார்''

- எம் அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி

எஸ்.எம்.எஸ்.


கடமைக்குத்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு,
உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு!

தி. பச்சமுத்து,
கிருஷ்ணகிரி-1

Tags : kadhir belpuri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT