தினமணி கதிர்

திரைக்கதிர்

17th Oct 2021 06:00 AM | - ஜி.அசோக்

ADVERTISEMENT

 

பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் "பஹிரா'. சைக்கோ கில்லர் வகை பாணியில் உருவாகிவரும் இப்படத்தில் பிரபுதேவா, அமைரா தஸ்தர், ஜனனி அய்யர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரபுதேவா, ""என் மீது அன்பைத்தரும் தரும், எல்லாருக்கும் என் அன்பு. பரதன் பிலிலிம்ஸ் பற்றி சொல்ல வேண்டும், மேன்மக்கள் மேன்மக்களே என்பது போல் அவர்கள் நல்ல விதம். ஒரு ஹெலிலிகாப்டர் கேட்டால் கூட முருகன் ஓகே சொல்லிலிவிடுவார். அப்படியான ஒருவர்தான் இந்த தயாரிப்பாளர். சினிமாவுக்குத் தேவையானவர். ஆதிக் ஒரு சிறந்த நடிகர். அவர் நடித்துக் காட்டுவது அட்டகாசமாக இருக்கும். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். ஜனனி நடிப்பதை பார்த்து பிரமிப்பாக இருந்தது. அடுத்து காயத்திரி பார்த்தாலும் அட்டகாசமாக நடித்தார். எல்லாருமே நன்றாக நடித்தார்கள். சோனியா அகர்வால் எனக்கு முன்பே தெரியும். அம்ரிதா தஸ்தர் தமிழே தெரியாமல் மிரட்டலான நடிப்பைத் தந்துள்ளார். உங்கள் அனைவர் ஆசிர்வாதமும் எங்களுக்குத் தேவை'' என்று பேசினார் பிரபுதேவா.

------------------------------------------------------------

சத்யஜோதி நிறுவனத்தின் தியாகராஜன் - ஹிப்ஹாப் ஆதி அடுத்தடுத்து இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கூட்டணியில் தயாராக உள்ள படம் "அன்பறிவு'. வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், இந்த கூட்டணி அடுத்தும் இணைந்து பணியாற்றவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஏ. ஆர். கே. சரவணன் எழுதி இயக்குகிறார்.

ADVERTISEMENT

இவர் ஏற்கெனவே இயக்கிய "மரகத நாணயம்' பரவலான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஃபேண்டஸி திரைப்படமாக இதன் களம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்க டி.ஜி. தியாகராஜன் வழங்குகிறார். கடந்த ஆயுத பூஜையில் இதன் தொடக்கப் பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில் 75 நாள்களில் ஒரே கட்டமாக படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளனர். முன்னணி நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள்மற்றும் நாயகியாக முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள "அன்பறிவு' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஹிப் ஹாப் ஆதியுடன் நெப்போலிலியன், காஷ்மீரா பர்தேசி இணைந்து நடிக்கின்றனர்.

------------------------------------------------------------

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் பழனிவேல் தயாரித்து வரும் படம் "ரஜினி'. விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், விமல் நடிப்பில் புதிய படத்தை தொடங்கிவிட்டார் ஏ.வெங்கடேஷ். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. விழாவில் விமல், தம்பி ராமைய்யா, படத்தின் இசையமப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் மகேந்திர குமார், களாபி, பரமசிவம், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ""நான் இயக்கும் முதல் பேய் படம் இது.

முற்றிலும் மாறுபட்ட கதை களம். ஹாரர் பட பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ""தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது வழக்கமான பேய் படம் அல்ல. பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனரஞ்சகமான படத்தை உருவாக்க இருக்கிறேன். விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய "ரஜினி' படப்பிடிப்பிற்கு ஒருநாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார். அப்போது நான் இந்த படத்தின் ஒன் லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழுக் கதையையும் கேட்டார். உடனே, கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது. உடனே படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம் என்று சொல்லிலிவிட்டார். நாங்களும் உடனே அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டோம். விரைவில் புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுளோம்'' என்று தெரிவித்துள்ளார் ஏ. வெங்கடேஷ் .

------------------------------------------------------------

அரசியல் சர்ச்சைகள், "23-ஆம் புலிலிகேசி' பட விவகாரம் என சினிமாவில் இருந்து விலகி இருந்து வடிவேலு, மீண்டும் களத்துக்குத் திரும்பி விட்டார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் "நாய் சேகர்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வடிவேலு. சுராஜ் எழுதி இயக்கி வரும் இப்படத்துக்கு ஒருபுறம் தலைப்பு பிரச்னை தலை தூக்கியுள்ளது. சதீஷ் நடித்து வரும் படத்துக்கு "நாய் சேகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் படப்படிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் வடிவேலு நடிக்கவுள்ள படத்துக்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் சுராஜ் பேசும் போது... ""வடிவேலு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. சின்ன இடைவெளிக்குப் பின் அவர் வந்திருப்பதால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக படம் உருவாக்கப்பட்டு வருகிறது. "நாய் சேகர்' என்பது இந்தப் படத்துக்கு பொருத்தமான தலைப்பு. வடிவேலுவுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நாய்களும் நடிக்கின்றன. எப்போதும் அவருடன் நாய்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் இந்த தலைப்பு.மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது '' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT