தினமணி கதிர்

நாகையாவின்  வருத்தம்!

17th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT


காலஞ்சென்ற நடிகர் வி.நாகையா இரக்கமும் அன்பும், பண்பும் நிறைந்த உள்ளமுடையவராக இருந்தார். ஒரு நாள் இரவு சுமார் 10 மணிக்கு நாகையா மயிலாப்பூரில் ஒரு நல்லகச்சேரியைக் கேட்டுவிட்டு காரில் தி.நகருக்கு வந்து கொண்டிருந்தார்.

பஸ் போக்குவரத்து நின்றுவிட்டது. மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் நனைந்தபடி பல ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தி.நகருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களும் கச்சேரி கேட்க வந்தவர்களே. அவர்கள் மீது இரக்கம் கொண்ட நாகையா, அவர்களை மழையில் நனையாமல் ஓரிடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு, மூன்று நான்கு தடவைகளில் அவர்கள் எல்லாரையும் தம் காரில் ஏற்றி தி.நகர் கொண்டு சேர்த்தார். தியாகராய நகரில் ஒரு சங்கீத மண்டபம் இல்லாததால்தானே இவர்கள் இதுபோன்று அவதிக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்ற வருத்தம் நாகையாவின் மனதில் ஆழப்பதிந்தது. அதன் விளைவாக அவரது தீவிர முயற்சியின் பயனாகத் தோன்றியதுதான் தியாகராய நகரில் உள்ள வாணி மஹால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT