தினமணி கதிர்

பேல்பூரி 

DIN

கண்டது


(கடையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வேனின் பின்புறத்தில்)

நாம் செல்வது பயணச்சாலை;
பந்தயச் சாலை அல்ல.

கே.திருக்குமரன்,
கடையம்.

(சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் உள்ளஒரு கிராமத்தின் பெயர்)

ஏழுபுளி

கே.ஆர். உதயகுமார்,
சென்னை - 1.

(மதுரை கீழவளவு அருகே உள்ள ஒருபேக்கரியின் பெயர்)

இட்லி குண்டன் பேக்கரி

வி.முத்துராமு,
பொன்னமராவதி.

(சென்னை அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் ஒரு சைக்கிள் பஞ்சர் கடையின் பெயர்)

அக்காள் பஞ்சர் கடை

வி.கண்ணகி ஜெயவேலன்,
அரக்கோணம்-3

கேட்டது

(காட்டாங்குளத்தூரில் நண்பர் வீட்டில்)


மனைவி: ஏங்க, குளிக்கவா போறீங்க...? பாத் ரூம் கம்பியில, என் துணிகள் இருக்கு, நனையாம பார்த்துக்குங்க...
கணவன்: கவலைப்படாதே! என் உடம்பே நனையாது... அப்புறம் உன் துணிகள் எப்படி நனையும்...?
மனைவி: ஆமால்ல... மறந்துட்டேன், நீங்க எப்பவுமே காக்கா குளியல் தானே!
கணவன்: ...?!...?!...?!

-வி.சி. கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.

(திருச்சி - கடைவீதியில் இருவர்)

""பையன் அடம்பிடித்து அழறானே? கேட்கிறதை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே?''
""எப்படி வாங்கித் தரச்சொல்றீங்க?''
""ஏன்...அப்படி என்ன கேக்குறான்?''
""பத்தாம் கிளாஸ் படிக்கிற அண்ணன் மாதிரி அஞ்சாம் கிளாஸ் படிக்கிற இவனும் ஸ்கூலுக்குப் போகணுமாம்''

அ.சுஹைல்ரஹ்மான்,
திருச்சி-21.

யோசிக்கிறாங்கப்பா!

மகிழ்ச்சியாக இருக்க குக்கரிடம் கற்றுக் கொள்ளுங்கள்:
தலையில் பிரஷர்...
கீழே நெருப்பு...
ஆனாலும் "சந்தோஷமாக' விசில் அடிக்கிறது.

பாலாஜி.கே,
சேலம் 2

மைக்ரோ கதை

ஒரு பேச்சாளர் பேச வேண்டிய இடத்துக்குப் போகும்போது வழியில்கார் பஞ்சர் ஆகிவிட, குறுக்கு வழியில் சிறிது தூரம் நடந்து செல்லலாம் என்றுநடக்கத் தொடங்கினார். நிறைய மரங்களும் செடிகளும் காடு போல் இருந்த அந்த இடத்தை அவர் கடக்கும்போது, பக்கத்துக்காட்டில் இருந்து வழி தவறி வந்த ஒரு சிங்கம் அவர் பாதையில் தென்பட்டது. அதிலிருந்து தப்பிக்கலாம் என்று சற்று பாதை மாறிநடந்தாலும் சிங்கம் அவரை விடவில்லை.

""நான் ரெண்டு நாளா பட்டினியா இருக்கேன்'' என்றது சிங்கம்.

உடனே பேச்சாளர், "" நான் உன்னைக் கொஞ்ச நேரம் புகழ்ந்துபேசுறேன். அதுக்குப் பிறகு என்னை சாப்பிட்டுக் கொள்'' என்றார். சிங்கமும் ஒத்துக் கொண்டது.

பேச்சாளர், "" காட்டுக்கு ராஜா சிங்கம். மகா பலசாலி, புத்திசாலி நீ வாழ்க'' என்று 2 மணி நேரத்துக்கும் மேலாக சிங்கத்தைப் புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சிங்கம் மயங்கிவிட்டது. அந்த நேரத்தில் அவர் சிங்கத்திடம் இருந்து தப்பித்து, ஓட்டம்பிடித்தார்.

சிறிது நேரம் கழித்து தலைதூக்கிப் பார்த்த சிங்கம், "அப்பாடா மயக்கம் வந்ததுபோல் நடிச்சேன். இல்லேன்னா இந்த ஆள் என்னை பேசியே கொன்னுருப்பான்' என்று நினைத்துக் கொண்டது.

எஸ்.அருள்மொழி சசிகுமார்,கம்பைநல்லூர்.

எஸ்.எம்.எஸ்.

பணம் இருப்பவனைத் தூங்கவிடாது
இல்லாதவனை வாழ விடாது.

ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

அப்படீங்களா!


வீட்டில் இரவில் எவ்வளவு நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தாலும் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களும் உட்கார்ந்து டிவி பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் ஒருவர் இரவு நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்தால் போதும், ""லைட்டை ஆஃப் பண்ணு. நாங்க தூங்க வேண்டாமா?'' என்று குரல் கொடுப்பார்கள். பிறருக்குத் தொல்லை தரும்விதமாக புத்தகங்களை வாசிப்பவர்களும் இருக்கமாட்டார்கள்.

இரவு நேரத்தில் தூக்கம் வரும் வரை புத்தகத்தைப் படிக்கலாம் என்று நினைத்து புத்தகத்தை வாசிக்கத் தொடங்கும் சிலர் நேரம், காலம் தெரியாமல் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும்விதமாக ஒரு விளக்கு வந்திருக்கிறது. தோளில் மாட்டிக் கொள்ளும் இந்த விளக்கு இரண்டு கைகளைப் போல நெஞ்சுக்கு நேரே தொங்குகிறது. இந்த விளக்கின் இருமுனைகளிலும் இருந்து புத்தகத்தை வாசிப்பதற்குத் தேவையான வெளிச்சம் மட்டும் வருகிறது. இதை அணிந்து கொண்டு படுக்கையறையில் புத்தகத்தை வாசித்தாலும், படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் பிறருக்கு இதனால் தொல்லை எதுவுமில்லை.

இந்த விளக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால், பதினாறு மணி நேரங்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தலாம். ஒருமுறை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும்.

புத்தகத்தின் இரண்டு பக்கங்களைப் புரட்டியதும் உடனே குறட்டை விடுபவர்களுக்கு இந்த விளக்கினால் எந்தப் பயனும் இல்லை.

என்.ஜே.,
சென்னை-58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT