தினமணி கதிர்

சிரி... சிரி...

28th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT

 

""உங்க டீச்சர் ரொம்ப பொறுப்பானவங்களா?  எப்படிச் சொல்ற?''
""என்னை அடிக்கறதுக்கு முன்னாடியும் அடிச்ச பின்னாடியும் என் கையை 
சானிடைசர் போட்டு கிளீன் பண்ணிடுவாங்களே.

பொ.பாலாஜிகணேஷ், 
கோவிலாம்பூண்டி.

 

ADVERTISEMENT

""லேடீஸ் நியூஸ் வாசிச்சா மட்டும்தான் என் மனைவி பார்ப்பா''
""ஏன் அப்படி?''
""என்ன டிரெஸ் போட்டிருக்காங்க, என்ன நகை போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கத்தான்!"

 

""எங்க வீட்டுல திருடிக்கிட்டுப் போனவன் பஞ்சத்துல அடிபட்டவனா இருப்பான்னு தோணுது சார் !''
""எப்படிச் சொல்றீங்க?''
""1 -வாரம், 10-நாளைக்கு முந்தி என் மனைவி செய்து பிரிஜ்ஜுல வச்சிருந்த சாம்பார்,ரசம், பொரியல்ன்னு எல்லாத்தையும் காலி பண்ணிட்டு போயிருக்கான் சார்?''

 

""மனைவி கிட்டே இருந்துதான்  போன் னு எப்படி கண்டுபிடிச்சே?''
""ரிங் வந்ததும் நீங்க தான் பெரிய அளவுல வைப்ரேட் ஆனீங்களே''

 

""மானேஜருக்கு இன்னைக்கு யாருமே திருமணநாள் வாழ்த்து சொல்லலையே, ஏன்?"
""அவர்தான் காலையிலேயே ,"அடுத்தவன் கஷ்டத்துல சந்தோஷத்தை வெளிப்படுத்தறவன் மனுசனே இல்லை' ன்னு சொல்லிட்டாரே''

 

""பேசிக்கிட்டே சாப்பிட்டா எங்க அப்பா திட்டுவாங்கடா''
""என்ன சொல்லுவாங்க?''
"வாயை மூடிக்கிட்டு சாப்பிடு' ன்னு சொல்லுவாரு!     

- வி.ரேவதி,
தஞ்சை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT