தினமணி கதிர்

பேல்பூரி

DIN

கண்டது

(கோவை மருதமலை ரோட்டில் ஐ.ஓ.பி காலனியில் ஒரு காபி ஷாப்பின் பெயர்)

ஆறாமலே

வி.பவானி,
கோவை-46

(ஈரோடு ரயில்வே காலனியில்ஒரு பேனர் விளம்பரத்தில்)

வீடு விற்பனைக்கு.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில்
வடக்கு பார்த்த வீடு.

க. ரவீந்திரன்,
ஈரோடு - 2.

(மதுரை திருநகரில் ஓர் உணவகத்தின் பெயர்)

அப்பத்தாஸ்

ந. பிரபுராஜா,
மதுரை -2.

கேட்டது


(நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நடத்துநரும் பயணியும்)

""ஏன் சார்... கொட்டை எழுத்துல போர்டு போட்டிருக்கு... அப்புறம் பஸ் எங்க போறதுன்னு சொல்லி ஏன் கேட்கிறீங்க?''

""இல்ல... நாகர்கோவில்ல இருந்திட்டே நாகர்கோவிலில்னு போர்டு வெச்சிருக்கீங்களே... அதான் கேட்டேன்''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

(புதிதாக வீடு கட்டிய ஒருவரும் அவருடைய நண்பரும்)

""ஒரு நாள் மழைக்கே வீட்டுக்குள்ளே தண்ணி வந்துடுச்சே... இடம் வாங்கும்போது விசாரிக்கலையா?''
"பத்தடியில தண்ணி வரும்னு விளம்பரம் பண்ணி வித்தானுங்க... மேலையா கீழையான்னு சொல்லாம விட்டுட்டானுங்க''

-வி.சி. கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.

யோசிக்கிறாங்கப்பா!

மகனை கஷ்டம் தெரியாமல் வளர்ப்பவர்
நல்ல அப்பா.
மகனைக் கஷ்டத்தைச் சந்திக்கவிட்டு
அதை எதிர்கொள்ள துணைநிற்பவர்
சிறந்த அப்பா.

மோகனா அம்பி,
கும்பகோணம்.

மைக்ரோ கதை


""தோசை ரெடி, எல்லாரும் சாப்பிட வரலாம்'' குரல் கொடுத்தாள் பத்மப்ரியா.
ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் எழுந்து டைனிங் ஹால் வந்தனர். அனைவரது தட்டுக்களிலும் ஆளுக்கொரு தோசை போட்டு சட்னி, சாம்பார் ஊற்றினாள் பத்மப்ரியா.
ஒரு துண்டு தோசை எடுத்து வாயில் வைத்தான் கணவன் கோதண்டம்.
""என்ன இது இப்படி உப்புக் கரிக்குது? த்தூ...''
""உப்பா?'' சந்தேகமாக மகனைப் பார்த்தாள் பத்மப்ரியா.
அவன் தோசையைப் பிய்த்து ஒரு வாய் சாப்பிட்டவன் திணறினான்.
""அம்மா தோசை மாவுல உப்பு போட்டியா, உப்புல தோசை மாவு போட்டியா... வாயில வைக்க முடியலை''
மகளிடம் வந்தாள்.
""உனக்காவது சரியா இருக்காடி?''
மகள், ""தவறுதலா ரெண்டு தடவை உப்பு போட்டுட்டியா'' என முறைத்தாள்.
""சரி... அந்த தோசையை சாப்பிடாதீங்க. வேற தோசை தர்றேன்'' என்ற பத்மப்ரியா, ஏற்கெனவே சுட்டு வைத்திருந்த வேறு தோசைகளை எல்லாருக்கும் கொடுத்தாள்.
""இதுலே உப்பு சரியா இருக்கே''
எல்லாரும் ஆச்சரியத்துடன் நன்றாகச் சாப்பிட்டனர்.
""நான் அவ்வளவு தூரம் மறுத்தும்,உங்க சித்தி மகளோட சீர் விசேசத்துல குடும்பத்தோட கலந்துக்கிட்டோமே... அப்போ இருந்தே எனக்கு கரோனா பயம். அதனால் தான் தோசை மாவுல உப்பைக் கொட்டி உங்க சுவை அறியும் திறனை பரிசோதிச்சுப் பார்த்தேன்'' என்றாள் பத்மப்ரியா.

நித்யா,
பொள்ளாச்சி- 1.


எஸ்.எம்.எஸ்.


பணத்தைத் தவறான இடத்தில்
முதலீடு செய்து ஏமாந்தவர்களை விட...
அன்பை சரியான இடத்தில்
காட்டாமல் ஏமாந்தவர்களே அதிகம்!

ஜி. மஞ்சரி,
கிருஷ்ணகிரி-1.

அப்படீங்களா!

மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.
ரயில், விமானப் பயணங்களின்போது சக்கர நாற்காலிகளின் தேவை அதிகமாகவே உள்ளது. வழக்கமாகப் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகளை பயணங்களின்போது பயன்படுத்துவது சிரமம். அதிலும் விமானப் பயணத்தின்போது, பயணி விமானத்தில் ஏறிய பிறகு, அந்த சக்கர நாற்காலியை விமானப் பணியாளர்கள் கன்னாபின்னாவென்று ஓரிடத்தில் வைத்து, பயணத்தின் முடிவில் அதை எடுத்துத் தருவார்கள். அதனால் சக்கர நாற்காலிகள் சேதமடைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட தொல்லைகள் எதுவுமில்லாமல், சக்கர நாற்காலியை கையோடு எடுத்துச் செல்லும் வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்ட்ரியா என்பவர் உருவாக்கியிருக்கிறார்."ரிவால்வ் ஏர் வீல் சேர்' என்ற பெயர் உடைய இந்த சக்கர நாற்காலியில் உள்ள சக்கரத்தின் விட்டம் 2 அடிகள்தாம். அதற்குள் அந்த முழுச் சக்கர நாற்காலியையும் மடித்து வைத்துக் கொள்ளலாம்.
ஏற்கெனவே உள்ள சக்கர நாற்காலிகள் அடைத்துக் கொள்ளும் இடத்தில் வெறும் 40 சதவீத இடத்தை மட்டும்தான் இந்த சக்கரநாற்காலி அடைத்துக் கொள்கிறது.
பயணத்தின்போது பெரிய பை ஒன்றில் இதை மடக்கி கையோடு எடுத்துச் செல்லலாம். விமான நிலையத்தில் வழக்கமாக நடைபெறும் சோதனைகளின்போது, இந்த சக்கர நாற்காலியை விரைவாகச் சோதனை செய்து விடுகிறார்கள்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT