தினமணி கதிர்

சிலம்பம்...  உலக சாதனை!

ச. பாலசுந்தரராஜ்


சிலம்பம் தமிழ்நாட்டில் உருவான கலை. உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்ககூடியது சிலம்பக் கலையாகும். சிலம்பம் குறித்து இளையதலைமுறையினருக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊர்களில் சிலம்பப் பயிற்சிக் கூடங்கள் உள்ளன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், தொடந்து 24 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர். இச்சாதனை குறித்து உதவித் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""எங்கள் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 32 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பொதுமுடக்கத்தினால் பள்ளி மாணவர்கள் உற்சாகம் இழந்துவிடக்கூடாது என அவர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளிக்க முடிவு செய்தோம். தொடந்து கடந்த ஆறு மாத காலமாக சிலம்பப் பயிற்சியை நான் அளித்தேன்.

ஏற்கெனவே கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தினேஷ்குமார் என்பவர் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார். எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 25 பேரைத் தேர்வு செய்து, ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி அளித்தோம்.

தினசரி காலையில் இரண்டு மணி நேரம் பயிற்சி அளித்து வந்தோம். இந்நிலையில் பயிற்சி பெறும் 25 மாணவர்களை வைத்து 24 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்யலாம் என முடிவு செய்தோம். இது குறித்து "டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு' தென் மண்டல ஒருங்கினைப்பாளர் பி.எம்.சம்பத்குமாருக்குத்தகவல் அளித்தோம்.

பின்னர் அவர் பள்ளிக்கு வந்து மாணவர்கள் தொடந்து 24 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றியதைப் பார்த்தார். தொடந்து அவர் கிராம மக்கள் முன்னிலையில் சாதனை செய்யக் கூறினார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் அக்டோபர் 27 -ஆம் தேதி மாலை 4 மணி முதல் அக்டோபர் 28 -ஆம் தேதி மாலை 4 மணி வரை மாணவர்கள் தொடந்து 24 மணி நேரம் சிலம்பம் சுற்ற ஏற்பாடு செய்யப்பட்ட து.

கிராமமக்கள் முன்னிலையில் 25 மாணவ மாணவிகள் தொடந்து 24 மணிநேரம் சிலம்பம் சுற்றும் சாதனையை தொடங்கினார்கள். முதலில் 25 பேர் இரண்டு மணிநேரமும், பின்னர் இரண்டு இரண்டுபேராக 30 நிமிடமும், பின்னர் எட்டு எட்டு பேராக மூன்று பிரிவாக 30 நிமிடம் சிலம்பம் சுற்றினார்கள்.

இறுதியில் 25 பேரும் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி நிறைவு செய்து உலக சாதனை படைத்தனர்.

இதில் மாணவர்கள் சிலம்பத்தில் உள்ள பிரிவுகளான நெடுங்கம்பு, நடுங்கம்பு, இரட்டைகம்பு, சுருள்வாள், தீப்பந்தம், குத்துவரிசை ஆகிய பிரிவுகளில் சிலம்பம் சுற்றிச் சாதனை புரிந்தனர். தொடர்ந்து "டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு' நிறுவனத்தின் செயல் அலுவலர் முக்தாபிரதாப், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சம்பத்குமார் ஆகியோர் மாணவர்களின் சாதனையை ஏற்றுக் கொண்டு உலக சாதனை என சான்று அளித்தனர்.

ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களைச் சாதனையாளராக்கிவிடலாம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT