தினமணி கதிர்

திரைக்கதிர்

DIN

சிங்கிள் ஷாட் பாணியில் "அகடம்' என்ற படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இயக்குநர் இசாக். கடைசியாக "பிக் பாஸ் புகழ்' ஆரி அர்ஜூன் நடித்த "நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்தை இயக்கி இருந்தார். மீண்டும் புதிய முயற்சியாக 12 மணி நேரத்தில் திரைக்கதை ஒன்றை எழுதி அதை இயக்கியும் இருக்கிறார். இப்படத்தைப் பற்றி இயக்குநர் இசாக் கூறுகையில், ""இந்தப் படத்திற்கு "181' என்று தலைப்பு வைத்துள்ளோம். இது முழுக்க முழுக்க ஹாரர் பாணி படம் என்றாலும், இது பெண்களுக்கான படம்.

பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கத்தில் சமீபத்தில் தமிழக மக்களின் மனதை உருக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைக்கதையை எழுதி எடுத்திருக்கின்றோம்'' என்றார்.

இப்படத்தை சாய் ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பாக பி. பி. எஸ். ஈச குகா தயாரிக்க புதுமுகங்கள் ஜெமினி, ரீனா கிருஷ்ணன், விஜய் சந்துரு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

-------------------------------------------------------------------------------

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான "சலீம்', விமர்சன ரீதியில் பாராட்டுகளைக் குவித்த இந்த படம், வசூல் ரீதியிலும் வெற்றியைப் பெற்றது. சலீம் படத்தின் அடுத்த பாகமாக உருவாகவுள்ள படம் "மழை பிடிக்காத மனிதன். இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். முதல் முறையாக டாமன், டையூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடந்து வருகிறது, 2022 - ஆம் ஆண்டு மத்தியில் இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. மேகா ஆகாஷ், சரத்குமார், தனஞ்செயா, ப்ருத்வி அம்பர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

-------------------------------------------------------------------------------

ரவி தேஜா நடிக்கும் அடுத்த படத்துக்கு "டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் அவனை சார்ந்த மக்கள் எதிர்கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

இப்படத்தில் அவரது உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றம் முன்னெப்போதிலும் இல்லாத வகையில் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் எனத் தெரிகிறது.

வம்சி எழுதி இயக்குகிறார். "அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இது உருவாகும்.

போஸ்டரில் ரவி தேஜா ரயிலை துரத்துவது போல் தெரிகிறது. "வேட்டைக்கு முன் அமைதியை உணருங்கள்' என்ற வாசகம் போஸ்டருக்கு மேலும் சுவாரஸ்யம் ஊட்டும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவைக் கையாள, ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

-------------------------------------------------------------------------------

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான "ஜீ5', பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறது. "மலேஷியா டு அம்னீஷியா', "டிக்கிலோனா' "விநோதய சித்தம்' உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த "ஜீ5' மேலும் பல சிறந்த பொழுதுபோக்குப் படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வசூல் சாதனை புரிந்த "அரண்மனை 3' படம் "ஜீ5' ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சந்தாதாரர்களுக்கு அளிப்பதில் "ஜீ5' மகிழ்ச்சி கொள்வதாக அதன் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

-------------------------------------------------------------------------------

2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து, சூர்யா நடித்திருக்கும் "ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா .ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒடுக்கப்பட்ட பழங்குடி இனத் தம்பதிகளின் வாழ்க்கையையும், முன்னேற வேண்டும் என்ற அவர்களின் மன உறுதியையும், இதற்காக அவர்கள் எதிர்கொண்ட கடினமான துன்பங்களையும் "ஜெய் பீம்' ரத்தமும் சதையுமாக செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், ""பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு'' என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன், ""ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். பொது சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் பட குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்'' என பதிவிட்டிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

SCROLL FOR NEXT